பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 டாக்டர் சி. ஆர். ரெட்டி பொருட்செறிவும் கொண்ட சொற்ருெடர்களால் திகழச் செய் தார். லாம்பு, ஹாஸ்லிட், லூகஸ், கார்டினர் இவர்களுடன் சேர்ந்துகொண்டு எளிய மனப்போக்குடன் திகழும் தனி மனிதனைப் பற்றிய கட்டுரைகளைத் தீட்டும் பணியில் தம்மை உட்படுத்திக் கொள்ளவில்லை. மாண்டேய்னை நினைவுபடுத்தும் போக்கில் முறை நிரம்பா இயல்புடன் கூடிய தொனி திகழச் செய்து தாம் மேற் கொண்டு எழுதும் கட்டுரைப் பொருளில் இயல்பாக அமைந் துள்ள பளுவை நீக்க வழி வகுப்பார். அச்சான நிலையில் தப்பிப் பிழைத்த இவரது பெரும்பாலான கட்டுரைகளை 200 பக்கங்கட்கு மேற்பட்ட வியாச மஞ்சரி என்ற தலைப்பில் கிடைக்கும் தொகுதியில் காணலாம். பிற நூலாசிரியர் கள் எழுதிய நூல்கட்கு இவர் எழுதிய முன்னுரைகள், அணிந் துரைகள் இவற்றின் வடிவிலோ, அல்லது கவிஞர் ஒருவர் அல்லது அவரை ஆதரித்த புரவலர் ஒருவர் நினைவாக ஏற்படுத்தப்பெற்ற முக்கிய நிகழ்ச்சிகளில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் வடி விலோ பெரும்பாலான இவரது கட்டுரைகள் அமைந்திருக்கும். இவரது சொற்பொழிவுகள் இவர் படித்த கட்டுரைகள் போல் உள்ளன. மெக்காலே மேற்கொண்ட முறைப்படி இவர் ஒருநூலைப் போல் உரை ஆற்ருவிடினும் பண்டைய இலக்கிய நெறி உணர்வின் வடிவம் இவர் மனத்தில் நிலையாகப் படிந்திருந்தது. தளர்ந்த சிந்தனையையும் கவனமின்றி எழுதுவதையும் இவர் தவிர்த்தார். இந்த வகையில், இவர் தெலுங்கில் எழுதினாலும், ஆங்கிலத்தில் எழுதினாலும், இவரிடம் வேறுபாடு சிறிதும் காணப்பெறவில்லை. இருபதிற்கும் குறைவான இக்கட்டுரைகள் பண்டைய இலக் கியம் முதல் சமகால கவிதை வரையிலும், வரலாறு சமயம் முதல் கல்வி சமூகவியல் வரையிலும் நவில்வனவாக உள்ளன. கட்டுரைப் பொருளின் தேவைக்கேற்றவாறும், நிகழ்ச்சிக்குப் பொருத்தமாகவும் இவர், வாதிடும்.போக்கிலோ நொடிக் கதை கூறும் போக்கிலோ, உணர்ச்சி தெரிவிக்கும் டாங்கிலோ, மெய் விளக்கப் பாணியிலோ காணப்பெறுவார். ஆனால், இவர் கையாளும் முறை பெரும்பாலும் முதல் விதிகளில் (First Principles) முழுக் கவனத்தை ஈர்க்கும் முறையிலும் சமகாலத்திய பிரச்சினைகளில் கூரிய உணர்வினை எழுப்பக்கூடிய முறையிலும் அமைந்து திகழும். நன்னயபட்டர் என்ற முதல் தெலுங்குக் கவிஞரை ஆதரித்த சாளுக்கிய அரசர் இராஜராஜ நரேந்திரனைப்பற்றிய கட்டுரை இராஜமகேந்திரபுரத்தில் (இராஜமந்திரி) நடைபெற்ற ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய தலைமையுரையின் புதிய பதிப்பாகும். தெலுங்கு மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பினை மேற்கொண்ட தற்குக் காரணமாக அமைந்த கால இடச் சூழ்நிலைகளை விரித் துரைக்கும் பாங்கும் முன்னேடியாகத் திகழ்ந்த நன்னயரின்