பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையாளர் 59 பணியை விரித்துரைக்கும் முறையும் இக்கட்டுரையின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. ஆனால், நம்முடைய வரலாற்றுணர்வு பற்றியும் அல்லது அந்த உணர்வே இல்லாத நிலை பற்றியுமான கருத்துரையை தமது முதன்மையான உரைக்கு முன்னுரையாக அமைத்துக் கொள்ளாதிருக்க முடியவில்லை. அவர் கூறியது: . . வரலாற்றுப் பாத்திரங்களைப் பற்றிச் சிறிதும் நினைவு கூராது புராணத் தலைவர்களை வழிபடுவது நம் மரபு முறை யின் ஒரு பகுதியாகவே இருந்து வருகின்றது. வரலாற்று உண்மைகளை நினைவுபடுத்திக் கொள்ளவும் அவற்றைப் பொது மக்களிடையே நன்கு பரவச் செய்யவுமாக அமைந்த விழா வினைக் கொண்டாடுவதில் நீங்கள்தாம் முதலிடம் வகிக் கின்றீர்கள். மற்றவர்களும் உங்கள் முன்மாதிரியைப் பின் பற்றி நடப்பார்களாக! மறு உலகில் அடையும் நற்பலனின் பொருட்டு விழாக்களைக் கொண்டாடுவதைப் போல இவ் வுலகின் இன்னலத் தொடர்புடைய விழாக்களைக் கொண் டாடாதிருப்பது எனக்கு வியப்பினைத் தருகின்றது. வர லாற்றுணர்வு நம்மிடம் இல்லாமைக்கு இஃது ஒரு சான்ருக அமைகின்றதா? இனிமேல் இக்குறையைப் போக்குவோமாக! நன்னயரின் கலையைப்பற்றி அவர் கூறுவது இது: நன்னயர் பண்டைய தெலுங்குக் கவிதையேயன்றி, தெலுங்கு உரை நடைக்கும் தந்தையாவார். அவரைப் போல் பிறர் எவரும் சிறந்த உரைநடையை எழுதவில்லை. சின்னயசூரி என்பார் மித்திர லாபமு’ என்ற தனது அழகான நூலை இதனை முன்மாதிரியாகக் கொண்டு அமைத்திருக்கக்கூடும் என்றே தோன்றுகின்றது. அபூர்வசங்க சம்ஸ்கரணமு (திரு. கோபால் ராவ்) என்ற தலைப்பிலுள்ள கவிதை இலக்கியத்திற்குத் தாம் எழுதிய முன் னுரை எள்ளல் இலக்கியம் (அங்கத இலக்கியம்) பற்றித் தன் னுடைய கருத்துகளைப் படிப்போரிடம் பகிர்ந்து கொள்ளப் பயன் படுத்தப்பெற்றுள்ளது. அவரது குறிப்பு: எள்ளல் இலக்கியம்பற்றிய நூல்கள் இந்தியாவில் மிக அதிகமாக இல்லை. ஒரு வேளை வளர்ச்சிக்குகந்த நகைச்சுவை இயல்பாக நமக்கு வராதோ! பரந்த நோக்கமுடைய நகைச் சுவை நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது; ஆனால் அது தீர்மானமான பழித்துரையினின்றும் வேறுபடுத்திக் காண முடியாத நிலையிலுள்ளது. சமயம், சமூகம் அல்லது பலருக்குப் பொதுவாகவுள்ள கருத்துகள் எள்ளலுக்குரிய இலக்குகளாக லாம்; தனிப்பட்ட ஆடவரும் பெண்டிரும் கூட இவ்வாறு