பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டாக்டர் சி. ஆர். ரெட்டி அமையலாம். . . . ஆங்கில எழுத்தாளராகிய ஸ்விப்ட் என்பார் தம்முடைய ஆற்றல் வாய்ந்த நூல்களில் மனித இயல்பு முழுவதையும் பாழாக்கும் முறையில் தாக்கினர் . . . வீரேசலிங்கம் தம்முடைய சத்திய ராஜா பூர்வ தேச யாத்ரலு என்ற நூலே இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு அமைத் தார்; ஆனால், நமது நற்பேற்றின் காரணமாக அதனை அ வ் வள வு வல்லந்தத் தாக்குதலாக அமைக்கவில்லை (அதிகமான விவரங்கட்கு பின்னிணைப்பு-2ஐக் காண்க). புகழார்ந்த வரலாற்றாசிரியரும் கல்வெட்டு ஆய்வாளரு மான எம். சோமசேகர சர்மா எழுதிய ஆந்திர வீருலு (ஆந்திராவின் வீரர்கள்) என்ற நூலுக்குத் தாம் அளித்த முன்னுரையாக அமைந்த கட்டுரையில் நாட்டுப்பற்றுக்கும் வரலாற்று அறிவுக்கும் இடையேயுள்ள தொடர்பு ஆராயப் பெறுகின்றது. இந்த முக்கிய செய்திபற்றி அவர் உரக்கச் சிந்திக்கின்ருர்: நாட்டுப் பற்றிற்கும் வரலாற்று அறிவுக்கும் இடையே நெருங்கிய, பிரிக்க முடியாத, தொடர்பு உள்ளது என்பதாகச் சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். ஆனல், எனக்கே உரிய ஐயங்கள் உள்ளன. அன்பும் (பக்தி) அறிவும் (ஞானம்) ஒன்றையொன்று சார்ந்துள்ள வகைகளா? ஆழ்ந்த நம்பிக் கைக்கும் இடையே தொடர்பு இல்லையா? இந்த முக்கிய செய்திபற்றி ஒருமனதான சிந்தனை இல்லை. இந்த இரண் டிலும் எப்பொழுதேனும் தொடர்பு இருந்திருக்க முடியுமா என்று நான் ஐயுறுகின்றேன் . . . . கல்வியின் பங்குபற்றிய ஒரு கட்டுரையில் இவர் அறிவுக்கும் (ஞானம்) செயலுக்கும் (கர்மம்) உள்ள தொடர்பு குறித்து இத்தகைய ஒர் ஆய்வில் இறங்குகின்ருர், ஒரு கோவையான அடிப்படை விளுக்களை எழுப்பிப் பந்தினை உருள விடுகின்ருர்: எது மிகவும் முக்கியம்-அறிவா (ஞானம்)? அல்லது வினையா (கர்மம்)? ஒரு பொருள் பற்றிய பல சொற்களை விரிவாக விளக்கி ஆராய்ந்தால் ஆயப்படுபொருளில் ஒரு சிறிது தெளிவாகலாம். வாழ்க்கையில் எது முதலிடம் பெறு கின்றது?-அறிவா அல்லது நடத்தையா, சிந்தனையா அல்லது குணவியல்பா; சொற்களா அல்லது செயல்களா? தொடர்ந்து அவர் கூறுவது: வாழ்க்கை நிறைவு அடைவதற்கு அறிவு மட்டிலும் போதுமானதன்று. இயற்கையின் சட்டப்படி பின்னர்க் குறிப் பிட்டது பல வழிகளில் ஒன்றே ஒன்ருகும் . . . . . .