பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையாளர் 61 சிந்தனைச் செயல்திறன் அறிவு அல்லது ஞானம் எய்துவதற்குப் போதுமானது; இவரைப் பொறுத்த வரையில் வாழ்க்கைக் கலை பிறபொருள்களுடன் அடியிற் குறிப்பிட்டவையும் தேவை யாகும். 1. இயற் கை ச் சட்டங்களே ப்பற்றிய அறிவு: 2. அவற்றைச் செயற்படுத்தல்பற்றிய அறிவு: 3. வேறுபடுத்திக் காணும் உணர்வு; 4. நேர்மை உணர்வு, 5. உடல் உழைப்பு. இந்தப் பின்னணியில் நோக்கும் டாக்டர் ரெட்டி இந்தியப் பல்கலைக் கழகங்களைக் குறை கூறுகின்ருர்; மேனுட்டுப் பல்கலைக் கழகங்களைப் போலன்றி இவை கடந்த காலத்திலேயே வாழ நினைக்கின்றன; மற்ற மதிப்புகளை முற்றிலும் விலக்கும் முறையில் அறிவின் முக்கியத்துவத்திற்கு அதிக அழுத்தம் தந்து ஏற்றத் தாழ்வான வளர்ச்சியடைகின்றன. கடந்த காலம் முக்கியமானது தான்; அதன்பால் நன்றியுணர்வு காட்டுதலால் மட்டிலும் முன்னேற்றத்தை அடைய முடியாது. அவர் கல்வியில் அடிப்படை மாற்றத்தை விரும்பும் கோட்பாடுபற்றிய குறிப்புரையால் சுருக்க மாகக் கூறுவது: . கடந்த காலத்தில் வாழ்வது நிகழ்காலக் கடமையன்று. கடந்த காலத்தைவிடவும் நிகழ்காலத்தைவிடவும் அதிக ஒளி யுடன் திகழக்கூடிய எதிர்காலத்திற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். . . . செய்ந்நன்றிமறத்தல் என்ற நிகழக்கூடிய குற்றச்சாட்டிற்குச் சிறிதும் அஞ்சாது பல்கலைக் கழகக் கல்வித் திட்டத்தை சீர்திருத்தும் போக்கில் முன்னேக்கிச் செல்ல வேண்டும். டாக்டர் ரெட்டியவர்கள் திருமணமாகாத மாணி (Bachelor) யாக இருந்தபோதிலும், திருமணத் திட்டத்தில் எழுச்சியான அக்கறையைக் காட்டுகின்ார். பண்டைய இலக் கி யங் களை ஆழ்ந்து கற்ற மாளுக்கன் என்ற முறையில் இந்துக்களின் பண்டைய திருமண முறையில் நிலவும் பல வகை ப் பட்ட மரபினைப் பற்றி நன்கு சிந்தித்துள்ளார். திருமணம்பற்றி இவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இராக்கத மணத்தைச் சார்ந்த சுயம் வரம் என்ற முறை என்ருவது நடைமுறையிலிருந்ததா என்ற வினவினை எழுப்பி அதற்கு உடன்பாடான மறுமொழியையும் தந்துள்ளார். இவரது பொருள் விளக்கம் பிறிதின் சார்பற்றும் சிந்தனையைத் தூண்டும் முறையிலும் அமைந்துள்ளது: இந்தத் திருமணம் நிகழும் சூழ்நிலைகளிலிருந்து, இது தன்னிச்சையாக நடைபெறுவது அன்று என்பதை மெய்ப் பிக்கலாம். திருமணவிழா அறிவிப்பு செய்வதற்கு முன்னர் நாளும் ஒரையும் (நற்குறியான நேரம்) உறுதி செய்யப்