பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 டாக்டர் சி. ஆர். ரெட்டி பெறுகின்றன. மணம் கேட்பவர்களுள் திருமணப் பெண் னின் மனத்திற்கொத்த ஒருவர் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? அவள் எதிர்பார்ப்பதற்கு ஏற்றவாறு ஒருவரும் இல்லாவிடில், அவள் அனைவரையும் மறுத்து விடுவதற்கு அவளுக்கு உரிமை உண்டா?. . . . . . திருமணப் பெண்ணின் விருப்பத்தைவிட ஒரைதான் அதிக முக்கியம் என்பதாக என் மனத்திற்குப் படுகின்றது. ஏனென் ருல் மணப்பெண் யாராவது ஒருவரை மணம் புரிந்து கொள்ளக் கடமைப்பட்டவளாகின்ருள். . . . எம்முறையி லேனும், ஒருவரைத் தவிர திருமணம் பேசும் அனைவருமே திருமணப் பெண்ணின் தந்தையைத் தாக்குவது உறுதி. ஆகவே, சுயம்வரம் என்பது திருமணப் பெண்ணின் விருப் பத்திற்கேற்ப நடைபெறுவதென்றது ஐயமே; அஃது இராக் கத மணமுறையின் ஒருவித மாற்றமே யாகும். டாக்டர் ரெட்டி தன்னுடைய வாதத்தை வலிமை பெறச் செய்வதற்கு வீடுமன் தன்னுடைய தம்பி விசித்திர வீரியன் திருமண தின் பொருட்டுக் காசியரசனின் மூன்று குமாரிகளைக் கவர்ந்தமை, (சிவதனுசை முறித்தலோடு) சீதையின் சுயம்வரம், (மீன் பொறி யைத் தாக்குதலோடு) திரெளபதியின் சுயம்வரம் உட்பட எல்லோரு மறிந்த பல்வேறு எடுத்துக்காட்டுகளைத் தருகின்ருர் ஏற்கெனவே தமயந்தி நளனைக் காதலித்தமை யாவரும் அறிந்ததால் அவள் சுயம்வரத்திற்கு விதிவிலக்கு அளிக்கின்ருர். இவர் கூறுவது: சீதையும் திரெளபதியும் உண்மையில் சூதாட்டத்தில் வைக்கப்பெறும் பணயப் பொருள்கள் போன்றவர்கள். திருமணத்தில் அவர்கள் விரும்பிக் கணவன்மார்களைத் தேர்வு செய்வதற்கு அவர்கட்கு உரிமை இல்லை. இந்த இரண்டு பேர் விடயத்திலும் தேர்வுமுறை வலுவைப்பற்றி இருப்பதால், இராக்கத மணமுறையில் இவர்கள் தரப்பெற்ருர்கள் என்றே கருதுதல் வேண்டும். இன்றும் மணமகள் வாழைக் குருத்தினை வெட்டும் வினை முறை வழக்கிலிருக்கின்றது. இந்த வழக்கு இந்த மணமுறையின் எஞ்சியுள்ள பகுதிகளைக் குறிப்பிடுகின்றது. இதனைப்பற்றி டாக்டர் ரெட்டி சுருக்கமாகக் கூறுவது: என்ற போதிலும், இராக்கத மணம் எல்லாக் காலங் களிலும் எல்லா நிலைகளிலும் வெறுப்பைத் தருகின்ற முறை என்று கருதுவது பெருந்தவறு: அதில் எல்லா நிறைகளும் ஒளியும் இல்லாதிருப்பது என்பதில்லை. ஆதலால்தான்