பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையாளர் 63 பழைய காலத்து அரசர்களால் இம்முறை ஆதரிக்கப்பெற் றது. இராக்கத மணத்துடன் (கவர்ந்து திருமணம் செய்தல்) இணைந்திருந்த மானக்கேட்டின் காரணமாக சுயம்வரம்' திருமண முறை நாளடைவில் வழக்கற்றுப் போயிருக்கலாம். காந்தர்வ முறைக் (காதல் முறை) திருமணத்தைப் புகழ்ந்து கூறும் டாக்டர் ரெட்டி பின்வருமாறு குறிப்பிடுவர்: ஆண்-பெண்ணின் அடிப்படை இயல்பூக்கங்களை யொட்டி காந்தர்வ மணம் அமைகின்றது. நம்முடைய பெருமக்கள் இம்முறை சமயவினையற்றிருப்பதாகக் கருதுகின்றனர். சுருங்கக் கூறினால், காந்தர்வம் எல்லா மந்திரங்களைவிடவும் வேதங்களைவிடவும் மனிதன் படைப்பைப்போலவே மிகப் பழைமையானது. இது மிக உயர்நிலையிலும் மிக நல்ல நிலை யிலும் இருப்பதான மனிதன் கொள்ளும் அன்புக்கு (காத லுக்கு) எக்காலத்திலும் நிலைத்திருக்கும் எடுத்துக்காட்டா கும். ஆணும் பெண்ணும் உயிரோடிருக்கும் வரையில் இது வழக்கற்றுப் போகாது. டாக்டர் இராமலிங்கா ரெட்டி சமயப் புறப் பகட்டினை விரும்பக் கூடியவர் அல்லர். உண்மையாகவே, மரபுவழியமைந்த இந்துக்களின் கர்மகாண்டத்திற்கு அறிகுறியாகத் திகழும் விரி வான சடங்கைச் சிறிதும் விரும்பாதவர்; அதனைக் கண்டு தம் பொறுமையையே இழந்தவர். இந்துக்களின் கடவுட்பற்று மிக்க கோயில் வழிபாடு இவரிடம் வெறுப்பைத்தான் உண்டாக்கியது. அதனை இவர் 'மனிதன் கோயில் குருக்களைத் தரகராகக் கொண்டு தன்னைப் படைத்த ஆண்டவனிடம் சொந்த பேரம் பேசுவ தாகும்' என்று விரித்துரைக்கும் அளவிற்குச் சென்றுவிட்டார். இந்து சமயத்தின் படிவளர்ச்சியில் பஜனைக் குழாங்களின் பங்கு என்ற பொருள்பற்றிய இவர்தம் கட்டுரையில் இதுவும் இதுபோன்ற மனத்தைப் புண்படுத்தும் சொட்டுரைகள் காணப் பெறுகின்றன. கிறித்துவர்களிடமும் இஸ்லாமியர்களிடமும் காணப்பெறும் சமயத்திருக்கூட்ட வழிபாட்டு முறையால் பெறும் பொது நன்மைபற்றிய கருத்திற்கு மாருக, இந்துக்களின் சிந்தனை யில் பொதுவாகத் தனி ஒருவர் வீடுபேறு அடையும் கருத்து முதன்மையாக இருப்பதைக் காணும் ரெட்டியவர்கட்குச் சிறிதும் மகிழ்ச்சி இல்லை. கிறித்தவர்கள்-இஸ்லாமியர்களைப் போலவே சீக்கியர்களும் குருநானக்கின் தலைமையில் திருக்கூட்ட முறை வழிபாட்டையே மேற்கொண்டனர். நாட்டுப் புறங்களில் சிறப் பாக இந்து சமூகத்தினரிடையே காணப்பெறும் கிட்டத்திட்ட இது போன்ற அணுகும் முறை பஜனைக் குழாங்களின் அமைப்பாகும்.