பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர் சி. ஆர். ரெட்டி இத்தகைய குழாங்கள் சிதைந்து அவற்றின் இடத்தில் பார்ப் பன குருக்கள் மீட்டுயிர்ப்பு பெற்றுப் பூசையினை மேற்கொண்டிருக் கும் நிலையினைப்பற்றித் தம்முடைய கழிவிரக்கத்தைப் புலப்படுத் தும் ரெட்டியவர்கள் தம்முடைய கட்டுரையில் கூறுவது: பஜனைக் குழாத்தை ஒரு திருக்கோயிலாக மாற்றியமைத் தால் கடவுளுக்கோ அல்லது நாட்டிற்கோ யாதொரு நன்மை யும் தரவில்லை. ஒரு திருக்கோயிலை ஒரு பஜனைக் குழாமாக மாற்றியமைத்தல் கடவுளின் மிகுபுகழும் மக்களின் பெருமை யும் அதிகமாகின்றன. இயல் பத்து சமூக அறிவியலறிஞர் அளவிலும் எல்லைப் பரப்பிலும் பாரத அர்த்த சாஸ்திரமு. என்ற நூல்தான் ரெட்டியவர்களின் நூல்களுள் பேரவாவினை எழுப்பவல்லது என்று கருதலாம். இது 450 பக்கங்களைத் தாண்டி யுள்ளது. இந்தியப் பொருளியல்பற்றிய புறப்பகட்டான நூலாக இருப்பினும் இஃது இந்திய சமூக மரபுபற்றிய ஆசிரியரின் சொந்த விளக்க உரையாகும். கெளட்டில்லியரின் அர்த்த சாஸ்திரம் மெளரியர் காலத்து இந்தியப் பொருளியலை விளக்கியுரைப்பதை விட ரெட்டியவர்களின் அர்த்த சாஸ்திரமு இவர் காலத்து இந்தியப் பொருளியலைக் குறுகிய பாடத்தொகுதியின் எல்லைக் குட்படுத்தும் முறையில் மட்டிலும் எடுத்துரைக்கும் நூல் அன்று. 1909-12ல் தாம் பேராசிரியராக இருந்த காலத்தில் மைசூர் பல்கலைக்கழக மாளுக்கர்கட்கு இந்தியப் பொருளியல்பற்றித் தாம் நிகழ்த்திய சொற்பொழிவுகள்தாம் இந்நூலின் மூலமாக அமைந் துள்ளது என்பதற்கு ஐயமில்லை. ஆனால், இஃது உண்மையில் இந்தியாவும் மேல்நாடுகளும் எதிரெதிரான நிலையில் தம்முடைய முக்கியமான பொருளாதார மூலவளங்களை எப்படி ஒழுங்கு படுத்துகின்றன என்பது பற்றித் தாம் நினைப்பதன் சுருக்கத்தைச் (சாரத்தை) தெரிவிப்பதாக நூல் அமைந்துள்ளது. தம்மால் முடியும் அளவிற்கு நீளமாகவும் வலிமையளிக்கும் முறையிலும்