பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுக அறிவியலறிஞர் 65 இந்தியாவைப்பற்றித் தெரிந்துகொள்ளும் அளவிற்குஎழுதப்பெற்ற ஒரு கட்டுரையாகும் இது. ஒருவேளை இதுகூட அறிவுத்துறை விளக்க ஏட்டுத் தொகுதி யில் தெலுங்குமொழி உணர்த்தும் வகையைப் பயன்படும் முறை யில் மேற்கொள்ளப்பெற்ற முக்கியமான முதல் சோதனையாகவும் இருந்தது என்றும் கூறலாம். இது பாராட்டும் அளவுக்கு ஒரு நல்ல நடையையும் புத்துயிர் கொடுக்கும் பிறிதின் சார்பற்ற அணுகும் முறையையும் கொண்டிருந்தது. ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் அமைந்த இந்நூலின் ஆசிரியர் கூறிச் செல்லும் போக்கிலும் விளக்கிச்செல்லும் முறையிலும் மிகச் சிறந்த திற னுடன் திகழ்கின்ருர். இந்திய மரபுப்படி வாழ்க்கையின் அடிப்படையான, அடைய வேண்டிய நான்கு குறிக்கோள் பொருள்களைச் (அறம், பொருள், இன்பம், வீடு) சுட்டும்முறையில், டாக்டர் ரெட்டி அர்த்தம் அல்லது பொருட் செல்வத்தைத் தாழ்வாகக் கருதும் போக்கினைக் கண்டிக்கின்ருர். இத்தகைய போக்கு உண்மையானதுதான். பாசாங்கு அன்று என்றிருந்தபோதிலும், இது நல்லறிவுடையதாக இருக்க முடியாது. ஏனென்ருல் இவ்வுலகில் பொருட் செல்வ மின்றிப் பயனுள்ள எதனையும் அடைய முடியாது. வணிகர்களில் சிலர் நேர்மையற்ற முறையில் செல்வத்தைப் பேரளவில் குவித் திருந்த போதிலும், செல்வமனைத்தும் தகாத முறையில் திரட்டப் பெற்றதன் விளைவே என்று எளிதாகப் பொதுப்பட அமைத்துக் கூறுவதை அறிவற்ற செயல் என்று எள்ளி நகையாடுகின்ருர். செல்வம் என்பது பாவத்தின் விளைவே என்ற இந்துக்களின் நம்பிக்கையையோ, எல்லாச் சொத்தும் களவு முறையில் சேர்ந்ததே என்ற மார்க்ஸின் எண்ணத்தையோ இவர் ஒப்புக் கொள்வதில்லை. நேர்மையே மிகச் சிறந்த கோட்பாடு என்ற ஆங்கில முது மொழிக்கு இவர் இணக்கம் தெரிவிப்பார். நாம் ஆன்மிக நலன் அடைய வேண்டுமாயின் பொருட் செல்வத்தை வெறுத்தொதுக்கவேண்டும் என்று பெருவழக்காக வுள்ள இந்துக்களின் எண்ணத்தை மாறுபடச் செய்வதே இந்த நூலில் இவர்தம் இடைவிடாத முயற்சிகளுள் ஒன்ருக உள்ளது. இந்த எண்ணம் மக்களிடம் செயலின் முதற்படியையும் கடுமை யாக உழைக்கும் திறமையையும் சிதைக்கும் பயனை விளைவிக்கும் என்பதும் வாழ்க்கை நிலைகளை மேம்படச் செய்யும் ஊக்கத்தை 1. வடமொழியில் இவை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம், என்று நான்கு புருஷார்த்தங்களாக உரைக்கப்பெறும். புருஷன்மனிதன்; அர்த்தம்-அடைய வேண்டிய பொருள்.