பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 டாக்டர் சி. ஆர். ரெட்டி யும் முயற்சியையும் வற்றச் செய்துவிடும் என்பதும் இவர்தம் சொந்தக் கருத்தின் போக்காகும். மேலும் இத்தவருண எண்ணம் பொருளாதார முன்னேற்றத்திற்கு நிகழக்கூடிய மிகப் பெரிய தூண்டுவிசையின்மையையும் தோற்றுவிக்கச் செய்யும். பொருட் சிறப்பின்றி அறத்தை நிலைநிறுத்த முடியாது என்று கருதுபவர் களுடன் இவர் ஒத்துப் போகின்ருர். அறத்தை மேம்படச் செய்வதற்கும் நாட்டை முன்னேற்றம் அடையச் செய்வதற்கும் இவர் வற்புறுத்தும் பண்புகளுள் மிகவும் முக்கியமானவை: 1. கடுமையான உழைப்பு (உடலுழைப்பு உட்பட); 2. ஒன்ருேடொன்று தொடர்புள்ள திறமை (அல்லது தகுதி)யும் தன்னம்பிக்கையும், 3. இயற்கைச் சட்டங்களைப் பற்றிய அறிவு (இது ஐரோப்பியர்கட்கு நீராற்றல், மின்னற்றல் கணிப் பொருள் படிவுகளின் எதிர்கால வாய்ப்புகள் இவற்றைப் பயன் படுத்த உதவியது; இதல்ை இறுதியாக அவர்கள் கைத்தொழிலி லும் வாணிகத்திலும் வெற்றிபெற முடிந்தது); 4. தொலை நோக்கம் - இதனால் ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் நீண்டஎல்லைத் திட்டங்களில் இறங்க முடிந்தது; இவை உடனடியாக உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் இல்லாதிருப்பினும், எதிர்காலத் தலைமுறையினருக்கு உதவக்கூடியவை) 5. கூட்டு வாணிகத் தலைமை; இது முதலீடு செய்வதில் கொண்டுசெலுத்தியதுடன் துணிவான மனநிலையை அடையவும் துணிகரச் செயலில் இறங்க வும் செய்தது (இங்கு இவர் ஐரோப்பியர்களின் தாமாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளும் விருப்பத்தினை இந்தியர்களின் அரசுப் பணியைச் சார்ந்திருக்க நாடும் விருப்பத்துடன் ஒப்பிட்டு வேறுபாடுகளைப் புலப்படுத்துகின்ருர்). இதே வாதமுறையைத் தொடர்ந்து இவர் எளிய வாழ்க்கை யையும் உயர்ந்த சிந்தனையையும் உண்டாக்கும் எனக் கருதப் பெறும் மனநிறைவு, சொந்தத் தேவைகளைக் குறைத்துக்கொள் ளல் போன்ற புண்ணியச் செயல்கள்’ என்ற இந்துக்களின் குறிக் கோள் நெறியைக் குறை கூறுகின்ருர். இந்நெறிக்கு மாருக மேல் நாடுகளில் உள்ளது போலவே, இவர் ஒவ்வொருவரையும் நல்ல குறைவறு செயல் நிலையில் வைக்கக்கூடிய 'தெய்விக உள்ள நிறை வின்மை’ என்ற உணர்வு, போட்டி மனப்பான்மை இவற்றை ஆதரிக்கின்ருர். அண்மை நூற்ருண்டுகளில் ஐரோப்பிய சமுதாயத்தை ஒப் பிட்டு நோக்க இந்தியச் சமுதாயத்தின் தளர்ச்சியைக் கண்டு இவர் அடியிற் குறிப்பிட்டுள்ள காரணக்கூறுகள்தாம் இந்நிலைக்குப் பொறுப்பானவை என்று இனங்காட்டுகின்ருர்: 1. இறுதியாக இன ஆண்மைத் தனத்தைப் போக்கக்கூடிய குறுகிய கருத்துகளின் அடிப்படையிலமைந்த தன் - இன மணத்தின்