பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூக அறிவியலறிஞர் 67 விளைவாக நேரிடும் தன் - இனப் பெருக்கம் (இனக் கலப்பால் உண்டாகும் நற்பயன்கள் முற்றிலும் மறக்கப்பெற்றன); 2.சிறுவர் மணங்கள்-மணமகன்மார்கள் மிக வயதானவர்களாக இருப்பின், இவை இள வயதுள்ள கைம்பெண்களையும், வேறு பல சமூகக் கேடுகளையும் விளைவிக்கும்; 3. ஊட்ட வளக் குறைவு-உணவு போதுமான விட்டமின் சத்துகளின்றி இருப்பினும், தேவைக்குக் குறைவாக இருப்பினும், உணவுகொள்ளும் பழக்கங்கள் ஒழுங் கின்றி இருப்பினும் மக்கள் படிப்படியாக நலிந்து போவர்; 4. குடி யிருப்பு வசதிக் குறைவுகள்-தொழிற்சாலைகளிலும் குடியிருக்கும் இல்லங்களிலும் நல்ல காற்ருேட்டமின்மை, உடல் நலத்திற்குகந்த வேறு வசதிகள் (கேட்பரிஸ் போர்ன்வில்லே' தொழிலாளர்கள் குடியிருப்பு, லெவர்ஸ்சன் லேட்துறைமுகம், கார்னெஜிஸ் பிட்ஸ் பர்க் குடியிருப்பு, ஆகியவை உற்பத்திப் பெருக்கத்திற்குத் துணை செய்வதாகக் கூறப்பெறுகின்றன) 5. தற்காலத்துப் புதிய தொழி லாளர் சமூகத் தேவைக்கேற்ற பயிற்சியால் பெறும் புதிய தொழில் திறன்களைக் கற்பதில் விருப்பமில்லாமை; 6. சாதி அமைப்பு முறை - இது சமூகப்பாளங்களையும் எளிதில் இயங்கும் நிலைக்குறைவையும் விளைவித்து விடுகின்றது. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒருவரின் இயற்கை விருப்பம் எப்படியிருப்பினும் அச்சாதியுடன் இணைந்துள்ள தொழிலையே கவனிக்கவேண்டும் என்று கருதப்பெறுகின்றது. தாம் தம் தொழிலை மாற்றிக்கொள்ள விரும்பினல் தம் சாதி முறையை அல்லது பெருமையை இழக் காமல் அங்ங்னம் செய்து கொள்வது நிகழக்கூடியதன்று. ஏற் கெனவே இந்து சமூகத்திலேயே அமைந்துகிடந்த ஊழ்வலிக் கொள்கையின் தத்துவம் பெருகுவதற்குத்தான் இம்முறை பயன் பட்டு, தொழிலில் அவர்தம் இயல்பான உணர்ச்சியார்வத்தைச் சிதைத்தது; 7. சமூகக் கேடுகள்-கூட்டுக் குடும்பம் முறையை அவற்றுள் ஒன்ருகத் தருகின்ருர். பெரும்பாலும் ஒருவர் பிழைப்புத் தொழிலை மேற்கொண்டிருக்கும்பொழுது, தாம் ஒன்றுமே செய் யாதுள்ள மாமன், சிற்றப்பன்மார், உடன் பிறந்தார் மக்கள், அத்தை, மாமன், சிற்றன்னை, பெரியன்னை ஆகியோரின் பிள்ளை கள் முதலியோர் அடங்கிய பெருங் கூட்டம் இவரைச் சார்ந் துள்ளவர்களாக இருந்து இவர்தம் உழைப்பில் வாழ்வார்கள். இம்முறை நோய்வாய்ப் பட்டிருத்தல், வேறு சொந்த முறையில் நேரிட்ட இன்னல்கள் காரணமாக ஒருவித காப்புறுதியாக இருக்கக் கூடுமாயினும், கூட்டுக்குடும்பம் பல்வகைக் கேடுகளில் ஒன்ருகிய சோம்பலை உண்டு பண்ணுவதில் சென்று முடியக்கூடும். மரபுரிமையாக வரும் இரத்தல் வாழ்க்கையும், பொதுவாக பிச்சை எடுக்கும் போக்கும் இவரால் குறிப்பிடப்பெறுகின்றன. மற்றைய சாதியினரின் வள்ளண்மையில்ை இச்சாதியினர் பல்