பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் ஒன்று அறிமுகம் தெலுங்கு மொழியின் பிற்கால வளர்ச்சியில் அதிகமாக வடமொழிக் கலப்பு ஏற்பட்டிருப்பினும், அம்மொழி அடிப்படை யில் திராவிட மொழி இனத்தைச் சார்ந்ததாகும். இந்திய, அயல் நாட்டு ஒப்பியல் மொழி அறிஞர்கள் கண்ட முடிவுக்கு மதிப்பு தருவதாக இருந்தால், இந்த உண்மையை மறுத்தற்கில்லை. தம் முடைய அணுகு முறையில் விருப்பு-வெறுப்பற்றவர்களாகவும், அறிவியல் அடிப்படையில் ஆய்வினை மேற்கொள்பவர்களாகவும் இருப்பவர்கள் இக்கருத்தில் நம்மிடம் எவ்வித ஐயத்தையும் விளை விப்பதில்லை. வரலாற்றுத் தொலைத் தோற்றத்தை அடிக்கடி மாற் றும் இயல்பான குறுகிய மன உணர்ச்சிக்கு இடங்கொடாதவர்கள் என்று எதிர்பார்க்கப் பெறுபவர்களன்ருே இவர்கள்? எழுத்து வடிவம் பெற்ற தெலுங்கு இலக்கிய வரலாற்றின் காலம் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகட்குட்பட்டதாயினும், அதனுடைய நவீன காலம் நூருண்டுகட்குச் சற்று அதிகமான காலமே யாகும். பத்தொன்பதாவது நூற்ருண்டின் பிற்பகுதியில் இக்காலம் தொடங்கியதாகக் கொள்ளலாம். மூன்று அல்லது நான்கு பெயர்கள், தம் காலத்திலும் அதற்கடுத்த காலத்திலும், வாழ்ந்தவர்களின் மனத்தில் தம்முடைய தாக்கத்தினால் தனித்து நிலைபெற்றுள்ளனர். சி. பி. பிரெளன் என்ற ஆங்கிலப் பெருமகனரும், அவர் காலத்திய ஐரோப்பிய அறிஞர்களும் தம்முடைய அகராதிகளா லும், இலக்கண நூல்களாலும் தெலுங்குச் சொற்களஞ்சியத்தை நவீனமாக்கும் செயலில் துணை நின்றனர். இது பிற்காலத்தில் வேருெரு மட்டத்தில் கிடுகு இராமமூர்த்தி பந்துலு என்பாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இந்த அறிஞர் பேச்சு வழக்கிலுள்ள தெலுங்கு மொழியையும் இலக்கிய மொழியாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தம் வாழ்நாள் முழு வதும் போராடினர். இன்றைய எழுத்தாளர்களில் எவரும் பரவஸ்து சின்னய்ய சூரி (1806-62) என்பாரை நவீன காலத்தின் முன்னோடி என்று