பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 டாக்டர் சி. ஆர். ரெட்டி வேறு வடிவங்களில் 'தானம்' என்ற பெயரால் பெற்று வாழக் கூடியவர்களாகப் பாவிக்கப்பெற்ருலும், இவர்கள் மற்றவர்களின் செலவில் வாழ்வதை ஒரு புண்ணியச் செயலாகச் செய்து கொண் டனர். இம்முறை ஒரு சமூகத்தில் பிறரை ஒட்டி வாழும் ஒருவித 'அட்டைப் பண்பை ஊக்குவிப்பதைத் தவிர, பலரிடம் பொரு ளாதார நிலைகளில் தன்னம்பிக்கையை அரித்துத் தின்னும் விளை வினை உண்டாக்கிவிடும். இது சமூகத்தில் நலத்தை விளைவிக்கும் செல்வாக்கினையும் இல்லாது செய்துவிடக்கூடும். இந்திய நோயுணர்வை இவ்வாறு விரிவாக நுணுகி ஆய்ந் துணர்ந்த பின்னர், இதனைப் போக்க டாக்டர் ரெட்டி கூறும் நோய் நீக்க மருந்து என்ன என்று கேட்கத் தோன்றுகின்றது. முக்கியமாக இவர் மூன்று வழிகளைக் குறிப்பாகத் தெரிவிக்கின்ருர்; 1. பல்வேறு துறைகளில் அதிகமாகத் தனிப்பட்டோரின் முயற்சி; 2. பேரளவில் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தல், 3. மக்கள் அன்ருட வாழ்வில் துய்க்கும் பொருள்களை உற்பத்தி செய்யவும் அவற்றைப் பகிர்ந்து வழங்கவும் கூட்டுறவு நிறுவனங்களை ஏற் படுத்துதல். பொருளாதாரம் சமூகம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மேட்ைடு முறை வாழ்க்கையில் தாம் காட்டும் தடையற்ற உணர்ச்சியார்வத்தில் டாக்டர் ரெட்டி பிற்கால விக்டோரியா காலத்தைச் சார்ந்தவர்களும் எட்வர்டு காலத்தைச் சார்ந் தவர்களுமான அறிவாற்றலுள்ளவர்களின் மாதிரியாக அமைந் துள்ளார். பிரிட்டிஷ் பேரரசு வான்முகட்டில் திகழ்ந்தது; அரசியல் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு வகையைச் சார்ந்த பொரு ளாதாரப் பரந்த கொள்கையுட்பட மேட்ைடு இயற்பொருள் வாதம் (Materialism) தன் தலையில் இன்னும் மோதல்களைப் பெறவில்லை. முதலாம் உலகப் பெரும்போர், தீவிர பொது வுடைமைக் கட்சிப் புரட்சி ஆகிய இரண்டும் இன்னும் சில ஆண்டு கட்கு அப்பால் தள்ளி நடைபெற்றன. ஐரோப்பாவின் நிலைப் பட்ட கருத்துகள் தாம் குலுங்கி அமைவதற்குத் தயாராக இருந் தும், அந்நிலை இன்னும் ஏற்படவில்லை. ஒருவகையில் அஃது அவர்தம் குறுகிய நோக்கம், தற்பெருமை, தன்னுறுதி இவற்றை விளக்குவ தாக அமைகின்றது. ஆனல் பேரளவில் இந்து முறைச் சிந்தனையில் மாதிரியாக இலங்கும் மரபு வழியிலமைந்த இந்திய சமூகத்தைப் பற்றிய இவர்தம் குற்றச்சாட்டு கூரியவடிவில் அமைந்துள்ளது: அந்நாளிலிருந்து இந்நாள் வரைக்கும் உள்ள இடைப்பட்ட ஆண்டு களில் இக்குற்றச் சாட்டின் கூர்மை முற்றிலும் மழுங்கலாக்கக் கூடியதாக இல்லை.