பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் பதினென்று வரலாற்று நிகழ்ச்சிகளின் சிற்பி . . . . இவ்வளவு நம்பிக்கைச் செழிப்பும் வினைமுறையில் இவ்வளவு கீழானதாகவும், இவ்வளவு அவா நிறைந்த ஆர்வமும் முடித்த செயலில் இவ்வளவு குறைவாகவும் உள்ள ஒரு வாழ்க் கையைக் காணல் அரிது’’’ இராமலிங்கா ரெட்டியவர்களை மிகுந்த ஆர்வத்துடன் வியந்து பாராட்டுபவர்களுள் ஒருவரும் யாவரும் நன்கு அறிந்த இதழாசிரியருமான காலஞ்சென்ற கே. ஈசுவர தத்தர் என்பார் இவரைப்பற்றி எழுதிய சொற்களாகும் இவை. ரெட்டியவர்கள் தம் அரை நூற்ருண்டு வாழ்க்கை நிறைவு பெறுந் தறுவாயில் இவை 1929-ல் எழுதப்பெற்றவை. ஆயினும், இந்த மதிப்பீடு இவர்தம் அரசியல் வாழ்க்கையைக் குறிப்பிடுகின்றது. எழுத்தாளர் என்ற முறையிலும் இவர்தம் பதிவுச் சான்றி லிருந்து இதே மதிப்பீட்டையே குறிப்பிடலாம். என்றபோதிலும் அரசியல் துறையில் இவர் முடித்த செயலேவிட இலக்கியத்துறை யில் இவர் அடைந்த வெற்றி கணிசமான அளவுக்கு அதிகமாகும். இங்குக்கூட இவர் ஒரு பேரொலியுடன் தொடங்கினர். இவர் சரியாக ஒரு சிணுக்க ஒலியுடன் நிறைவு செய்யாவிடினும், இவருடைய திறமையுடன் கூடிய ஒருவரிடம் எதிர்பார்க்கக் கூடிய அளவுக்கு இவர் வெடியோசையை, பேரொலிகளை எழுப்பக்கூடும் வகையில், தொடர்ந்து செல்லவில்லை; இவர் ஆதரவில் இருந்த வரும் பண்டைய இலக்கியங்களை இவருடன் சேர்ந்து ஆய்ந்தவரு மான இராள்ளபல்லி அனந்த கிருஷ்ண சர்மா இவரைப்பற்றிக் கூறியது: எங்களுடைய சொந்த உறவின் நெருக்கத்தை மறந்து புறநிலை நோக்குடன் இவரைக் கூர்ந்து நோக்க முயன்ருல் இவருடைய பெரியனவும் அருமையுடையனவுமான திறன் களைக் கொண்ட ஒருவர் செய்யக்கூடியவற்றையெல்லாம் இவரால் செய்ய இயலவில்லை என்று கூறுங்கால் நான் வருந்தாதிருக்க முடியவில்லை. இந்த அளவுடன் ஒப்பிடுங் கால், நம்மில் சிலருக்கு எவ்வளவுதான் உள்ளக் கிளர்ச்சி 5