பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 டாக்டர் சி. ஆர். ரெட்டி தருவதாக இருந்தாலும் இவர் செய்து நிறைவேற்றியது மிகக் குறைந்த அளவு மாத்திரமே யாகும். இஃது என் னுடைய எண்ணம் மட்டிலும் அல்ல; இவருடைய மானக் கர்களுள் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர் . . . . பத்தொன்பது வயது இளம் மாணுக்கராக இருந்தபொழுதே இக்காலத் தெலுங்குக் கவிதையின் எல்லையைக் காட்டும் அளவு நிலைத்து நிற்கும் ஒரு நீண்ட கவிதையை இயற்றினர். நன்கு முதிர்ந்த நிலையில் இவர் இயற்றிய ஒரு சில தனிச் செய்யுட்களே யன்றி வேருென்றும் இல்லை. உலக வாழ்க்கையில் நன்கு பக்குவப் பட்ட மனிதரிடம் கவிதை படைக்கக்கூடிய ஊற்று உலர்ந்து விட்டதா? இருபது வயது கூட நிரம்பப்பெருத இளைஞராக இருந்த பொழுது, கலா பூர்ளுேதயமு என்ற இலக்கியத்தைச் திறய்ைவு செய்து முடித்தார்; திடுக்கிடச் செய்யும் வகையில் இதன் அணுகும் முறை பிறிதின் சார்பற்றதாகவும், இவர் அளித்த திறனுய்வு இலக்கியத்திற்கு ஒரு கருமூலமாகவும் அமைந்தது. அரை நூற் ருண்டுக்காலஅளவாகிய தம் எஞ்சிய வாழ்க்கையில் இவர் கையிருப் பில் இருந்ததெல்லாம் சிதறிக்கிடந்த கட்டுரைகள், முன்னுரைகள், அணிந்துரைகள் இவற்றின் சிறு தொகுதியே யாகும். ஒரு பெரிய திறய்ைவாளரிடம் எதிர்பார்ப்ப தெல்லாம் இவ்வளவுதான? கவிஞர் என்ற முறையிலும், திறனாய்வாளர் என்ற முறையிலும் தம்முடைய கிறித்தவக் கல்லூரி நாட்களுக்கப்பால் இவரிடம் யாதொரு வளர்ச்சியும் தென்படவில்லை என்று சிலர் வாதிடுவர். அப்படி இவர் வளர்ந்திருந்ததாகக் கருதப்பெற்ருலும், விளைவின் அளவால் இவர் சிறிதேனும் சான்று காட்டவில்லையே என்று மேலும் கூறுவர். தம் வாழ்க்கையின் இறுதிக் காலம் வரையிலும் தெலுங்கு மகாபாரதம் இவரது தனிப்பற்றுக்குரிய பண்டைய இலக்கிய மாகும். தாம் விரும்பிய பொழுதெல்லாம் அகத்தெழுச்சி அல்லது ஆதாரம் பெறுவதற்காக அதனைப் படித்தார்; திரும்பப் படித் தார்; எண்ணற்ற முறை திரும்பத் திரும்பப் படித்தார். அதனைப் பற்றி மிக ஆழமாகவும் சிந்தித்தார். ஆளுல் திரெளபதி போன்ற ஒருசில பாத்திரங்களைப்பற்றித் தந்த ஒருசில பக்க ஒளிகளைத் தவிர விளக்கம் தரும் முறையில் இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவரளவு பண்டைய இலக்கியத்தில் புலமை பெற்றிருந்த இவரிடம் எதிர்பார்க்கப்பெற்றது இவ்வளவுதான? மிக ஆவலுடன் எதிர் பார்க்கப்பெற்ற மகாபாரதத்தின் விளக்க உரை வடிவில் தலை சிறந்த நூலொன்றைத் தருவதற்கு உண்மையில் இவரால் முடி யுமா?-இவர்தம் நூல்களைப் படிப்போர்களுள் நம்பிக்கையுறுதி