பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நிகழ்ச்சிகளின் சிற்பி 71 யற்றவர்களின் மனத்தில் எழும் வின இது. இவருக்குத் தேவைப் பட்ட நேரம் எல்லாம் இவருக்குக் கிடைத்ததா? இவை போன்ற விளுக்கள் யாவும் நம்மை 'அவ்வாருயின், 'ஆனல்' 'ஒரு வேளை நடந்திருக்கலாம்' என்று நிலவும் தற் காலிகக் கோட்பாட்டு உலகிற்குத்தான் நடத்திச்செல்லும். கட்சி அரசியல், கல்வி ஆட்சிமுறை போன்ற கவனத்தைத் திருப்பும் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்திராவிடில், டாக்டர் ரெட்டி நிலைத்து நிற்கக்கூடியவையும் கணிசமானவையுமான சிலவற்றை அதிகமா கவே எழுதியிருந்திருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகச்சொல்ல முடியாது. மேட்ைடுக் கவிஞர்களாகிய கீட்ஸும் ஷெல்லியும் இளமையிலேயே மறைந்தனர்; ஆனால் வெளியிடப்பெற்ற அவர் தம் இலக்கியம் நம் முன்னே உள்ளது. அவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால், என்னென்ன செய்திருக்க லாம் என்ற எண்ணக் கோட்டைக்குள் நாம் தஞ்சம் புகாமல் வெளியிடப்பெற்றுள்ள அவர்தம் நூற்ருெகுதியே நம்முடைய கவனத்தைக் கவர்வதற்குப் போதுமானதாகும். அதே அடை யாளத்துடன், டாக்டர் ரெட்டி நம்மிடம் உண்மையிலேயே விட்டுச் சென்றவற்றின் அடிப்படையிலேயே அவரை மதிப்பிடல் வேண்டும். வெளியிடப்பெற்றுள்ள இவர்தம் இலக்கியங்கள் முன்னியல் களில் ஆராயப்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியில் இலக்கியத் திறய்ைவு வரலாற்றில் கவித்துவத் தத்துவ விசாரமு என்ற நூல் ஒர் எல்லையைக்காட்டும் அடையாளம் என்று சரியாகவே போற்றப்பெற் றுள்ளது. பிரபந்தங்களின் தொடர்பான இவர்தம் விளக்க வுரை யின் மதிப்பீடுகள் அவ்விலக்கியங்களில் தனிப் பயிற்சி பெற்றவை புலவர்களால் முழு மொத்தமாக ஒப்புக் கொள்ளப்பெற்றவை என்பது அல்ல. இவர்தம் ஆராய்ச்சிக் கட்டுரையில் குற்றங்கண்டு பல மறுப்புரைகள் வெளிவந்துள்ளன. ரெட்டியவர்களால் முன் னிறுத்தப்பெற்ற பெரும் பகுதி வாதங்களைக் கலூரி வியாசமூர்த்தி தம் நூலில் எதிர்த்துத் தாக்க முயல்கின்ருர். இந்திய அழகுக் கலைகளில் தனித் திறமைபெற்ற டாக்டர் ஜி. வி. கிருட்டிண ராவ் கலாபூர்ளுேதயமுபற்றிய ஆராய்ச்சி என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் தந்துள்ள தம்முடைய பிஎச்.டி. ஆய்வுக் கட்டுரையில் புரிந்துகொண்டதிலும் விளக்கவுரை தந்திருப்பதிலும் ரெட்டியவர்களின் நூலில் ஒரு சில தவறுகளைக் காண்கின்ருர். ரெட்டியவர்களே இவர் மிகவும் வியந்து பாராட்டியிருந்தாலும், இந்திய மரபுப்படி அதற்குரிய தனிப்பட்ட எடுத்துக்காட்டு அமைப் புடன் எழுதப்பெற்றுள்ள நூலை மதிப்பீடு செய்வதில் தொடர் பில்லாத மதிப்பீட்டு அளவு கோல் ஒன்றினை இறக்குமதி செய்து பொருத்திப் பார்க்கும் கருத்திற்கு முற்றிலும் உடன்பாடு தெரி 5-A