பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர் சி. ஆர். ரெட்டி விக்கவில்லை. ஆனால், ரெட்டியவர்கள் இலக்கியத் திறய்ைவின் அடிப்படை விதிகளடங்கிய அளவு கருவியை எல்லாவற்றிற்கும் பொருந்துமாறு அமைத்துக் கொண்டு வெற்றி பெற்ருர். இப் போக்கினின்றும் பின்வாங்கவில்லை என்பதைப் பின்னர் விளைந்த நிகழ்ச்சிகள் காட்டியுள்ளன. அண்மை காலத்துத் திறய்ைவாளர் கள் ரெட்டியவர்களைவிட இன்னும் முன்னுக்குச் சென்றுள்ளனர்; ஆளுல் இவர் சென்ற திசையிலேதான் அவர்களும் சென்றுள்ளனர். தெலுங்கு இலக்கிய ஆராய்ச்சியில் வேருெரு திசையிலும் டாக்டர் ரெட்டி வரலாற்றுப் பெருமையை உண்டாக்கவல்ல பங்கினை நல்கியுள்ளார். டாக்டர் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழியியலின் கோட்பாட்டு உயர்நிலை ஆசாரியன் என்று வருணித் துரைக்கப்பெறக் கூடுமாயின், டாக்டர் ரெட்டியவர்கள் இக் காலத்துத் திராவிட இலக்கியத்தின் கோட்பாட்டு வீரத் திருத் தொண்டர் என்று நேர்மையாகவே புகழப்பெறலாம். அளவுக்கு மீறிய வற்புறுத்தல் காரணமாக சில தவறுகள் எழுந்திருந்த போதிலும், மெய்யெனக் காட்டி நம்ப வைக்கும் சான்றுகளின் துணைகொண்டு டாக்டர் கால்டுவெல் அவர்களால் திராவிட மொழிக் குடும்பத்தில் தெலுங்கின் இடத்தை நிலைநாட்ட முடிந் தது. தெலுங்கர்களின் இலக்கியத்தில் திராவிடக்கூறின் மதிப்பை யும் தமிழர்களின் இலக்கியத்துடன் அதன் இன உறவையும் டாக் டர் ரெட்டியவர்களால் வெளிக்கொணர்ந்து காட்ட முடிந்தது. பூத்தலப்பட்டு சீராமலு ரெட்டி அவர்களின் கம்பராமா யணத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கு நல்கியுள்ள முன்னுரை யில் டாக்டர் ரெட்டியவர்கள் எழுதியது: இன அமைப்பில் நாங்கள் (ஆந்திரர்கள்) திராவிடர் களாக இருக்க நேரிட்டாலும், கல்வி முறையிலும் பண் பாட்டு முறையிலும் நாங்கள் ஆரியர்கட்கு மிக அருகில் வந்து விடுகின்ருேம். யாப்பு அமைப்புகள் வடமொழி மூலத் திலிருந்து ஆக்கப்பெற்றவை. தெலுங்கு மொழியும் வட மொழியின் மிக நெருங்கிய மறுபகர்ப்பாக உள்ளது. . . . எனினும், முந்திய காலத்தில் தெலுங்கிற்கும் தமிழுக்கும் இடையேயுள்ள தொடர்புகள் உண்மையிலேயே மிகநெருக்க மாக இருந்திருத்தல் வேண்டும். நாளடைவில் தெலுங்கர் களின் வாழ்க்கையைப் போலவே அவர்தம் இலக்கியமும் வடக்கு நோக்கித் திரும்பியது. அது தெற்கு நோக்கித் திரும்பி யிருந்தாலும்கூட இரண்டு வழிகளிலும் நாங்கள் நல்ல பயனைப் பெற்றிருந்திருப்போம். மொழிபெயர்ப்பு இலக்கியங்களைக் கண்டு இவர் மிக வியப்பு அடைகின்ருர்: