பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நிகழ்ச்சிகளின் சிற்பி 73 ஆரிய சமயப் பண்டைய இலக்கியங்கள், காவியங்கள், நாடகங்கள் போன்ற பல இலக்கியங்கள் வடமொழியினின் றும் மொழிபெயர்க்கப்பெற்றிருக்கும்பொழுது, தமிழ் இலக் கியத்தினின்றும் ஏன் யாதொன்றும் தெலுங்கில் மொழி பெயர்க்கப் பெறவில்லை என்பதற்குக் காரணம் ஒன்றுமில்லை. வடமொழியினின்றும் மொழிபெயர்ப்புகள், திரும்பவும்மொழிபெயர்ப்புகள் என்று மிகுந்த அளவில் உள்ளன! இராமாயணத்திலும் சாகுந்தலத்திலும் உள்ள உருத்திரிபு வகை தெலுங்கு நூல்களின் தொகையை நோக்குங்கள். இன்னும் எத்தனை வரப்போகின்றனவோ! அவர்கள் மிகச் சிறந்த கலைப் படைப்பாகிய மணிமேகலையின் மிகு புகழை ஏன் தெலுங்கில் கைப்பற்ற முயலக்கூடாது? சுவைக்க முடியா மையாலா? அல்லது தொடர்புகொள்ள முடியாமையாலா? பாலி மொழியிலுள்ள புத்த சமயப் பண்டைய இலக்கியங் களாலும் இதே ஊழ் பகிர்ந்து கொள்ளப் பெற்றது. அஷ்வக் கோஷர் எழுதிய புத்த சரிதம் என்ற நூலின் அருகில் கூடப் போக ஒருவரும் கவலை கொள்ளவில்லை; இங்ங்ணம் வேண்டுமென்றே வலிந்து மேற்கொள்ளப்பெற்ற தீண்டாமைக்குச் சமயத்தைப் பற்றிய தப்பெண்ணமே காரணமாகும் என்று இவர் கருதினர். 'மந்திர அறிவுக் குவைபோல் கிட்டத்தட்டத் தெலுங்கு இலக்கியத் திலும் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்திருந்தது. நன்னெசோடா, பல்குரிக்கி சோமநாதர் போன்ற வீர சைவக் கவிஞர்களும் புகழ் பெரு திருப்பதற்கும் இது விளக்கம் தருவதாக அமைகின்றது - இவ்வாறு இவர் கூர்ந்து ஆராய்ந்தார். இதனைத் தொடர்ந்து இவர் கூறியது: "நாம் தமிழ் இலக் கியம் தீண்டத்தகாதது என்று கருதாவிடினும் கூட, நாம் அதனைத் தொடாதிருப்பதற்குக் காரணம் இத்தகைய ஒன்றே யாகும். காரணம் எதுவாக இருப்பினும் நாம் பட்ட இழப்பு மிகவும் கேடளாவியதாகும். பெரியபுராணம், ஆழ்வார்களின் வரலாறு, சைவசித்தாந்தத் தத்துவம் போன்ற பக்தி, ஞானக் கருவூலங்களை இழந்துவிட்டோம். அதுவும் கலைத்திறமை வாய்ந்த களிப்பை (ஆனந்தம், அல்லது சாகித்யானந்தம்) இழந்தது மிகவும் கேடளா வியதாகும். மணிமேகலையைப் போன்ற இலக்கியத்தைப் பயில்வ தால் ஏற்படும் களிப்பின் கூத்தாட்டத்தில் எழும் மயிர்சிலிர்ப் புணர்ச்சி நமக்கு மறுக்கப்பெற்றுள்ளது. இது நம்முடைய அவப் பேருகும். இதனை நமக்குத் தமிழர்கள் கொடுக்கவில்லை என்பது காரணமல்ல. ஆனால், ஆந்திரர்களாகிய நாம் அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளவில்லை'. இந்தப் பின்னணிக்கு எதிராக, கம்பராமாயணத்தின்