பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் சி. ஆர். ரெட்டி தெலுங்கு மொழிபெயர்ப்பை இவர் இலங்கைக்கும் இந்தியாவிற் கும் இடையிலுள்ள சேது போன்ற ஒரு சேதுவாகவே காண் கின்ருர். தமிழுடன் தெலுங்கின் தொடர்புகளைப் புதுப்பிப் பதற்குத் தாம் சிறந்த முறையில் முயல்வதைப் போலவே, தெலுங்கு இலக்கியத்தில் 'மார்க்கம்', 'தேசி ஆகிய கூறுகள் தொடர்பு கொண்டிருப்பதைப் போன்ற ஒரு முறையில் இவரே ஆரியக் கூறுகட்கும் திராவிடக் கூறுகட்கும் இடையே ஒரு தொடர்பு போல் செயற்படுகின்ருர். இலக்கியக் குடியரசில் இவர் ஒரு பாலம் அமைப்பவர்போல் திகழ்கின்ருர். இவர் பொறுப்பில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க புது முயற்சி களுள் மற்ருென்று அரங்ககாத ராமாயணத்தைப் புதுத் தோற்றத் திற்குக் கொண்டு வந்ததாகும். இதன் ஆசிரியர் யார் என்பது பற்றிய உண்மையான ஆளடையாளம் (அரங்கநாதரா, கோன புத்தரா, வேறு யாராக இருப்பினும்) எப்படியிருந்த போதிலும் கூட, அந்த இலக்கியத்தின் அரிய அழகுகள் தெலுங்கு மொழியைக் கற்போரின் உள்ளங்களில் நிலைநாட்டப்பெற்றிருக்குமானல், அது முக்கியமாக ரெட்டியவர்களின் உணரும் ஆற்றலுடன் கூடிய பகுப்பாராய்ச்சியாலும், அதனை ஊக்கத்துடன் ஆதரித்துப் பேசிய தாலுமே என்று துணிந்து கூறலாம். கம்பனிலும் துளசியிலும் காணப்பெறும் வால்மீகியினின்றும் விலகிச் செல்லும் போக்கு களைவிட இந்தக் காவியத்தில் காணப்பெறும் இத்தகையப் போக்கு கள் புலமையற்ற இடைச் செருகல்கள் என்று புருவங்களே நெறித்து வெறுப்புக் காட்டலாகாது. வேமனரின் கவிதை நலன்களைப்பற்றி இவர் ஆதரித்துப் பேசி யது இன்று வேகமாகவும் உறுதி செய்யக்கூடியதாகவும் இருந்தது. சில நூற்ருண்டுகளாக வேண்டுமென்றே வலிந்து மேற்கொள்ளப் பெற்றிருந்த புறக்கணிப்பினின்றும் திட்டமிடப்பெற்ற பகைமை உணர்ச்சியினின்றும் இந்த ஞானக் கவிஞரை விடுவித்ததில் சி.பி. பிரெளனுக்கு அடுத்து இவர்தான் மிக அதிகமான பங்கினை மேற்கொண்டார் என்று சொல் ல வே ண் டும். அண்மைக் காலம்வரையில் முரட்டுப் பிடிவாதப் பண்டிதர்கள், புலமைச் செருக்குடையவர்கள் இவர்களேயன்றி நன்மதிப்புடன் திகழ்ந்த புலவர்களும் கூட வேமனரைச் சினமூட்டும் செய்யுளை இயற்று பவர் என்றும், எப்பொழுதுமே வசைமாரி பொழிபவராகவும் அடிக்கடி அவதூறு பேசுபவராகவும் இருந்தார் என்றும், மிகக் குறைவாகவே மதித்து வந்தனர். வேமனர் சினமுள்ளவராகவும் வெறுப்பினை விளைவிப்பவராகவும் இருந்தார் என்பதற்கு ஐய மில்லை. அவர் அங்ங்ணம் இருந்ததற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. ரெட்டியவர்களின் மதிப்பீட்டில் அவர் ஒரு கவிஞர், உண்மையான கவிஞர், ஒரு பெருங்கவிஞர்: 'சுருக்கம் என்பது