பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நிகழ்ச்சிகளின் சிற்பி 75 சொல்திறத்தின் ஆன்மா என்ருல், இவ்வுலகில் இவரைத் தவிர சொல்திறமுடையவர் ஒருவரும் இலர் . . . . இவர் ஒர் இயற்கை யாற்றல் நிறைந்த கவிஞர்; பிறவிக் கவிஞர்' மேலும் அவர் சொல்லுவார்: பகவான் இராமகிருஷ்ணர்தான் மிகக் கீழ்ப்பட்ட சாதி யினருக்கெல்லாம் கீழ்ப்பட்ட சாதியினர் என்று உரிமை கொண்டாடினர்; சாதி அமைப்பையும் சாதியுணர்வையும் பலரறியப் பழித்துக் கூறினர். இராமகிருஷ்ணரின் அவ தாரத்தைப்பற்றி முன்னறிவிப்பாக இருந்த கவிஞர் வேமனர் என்று கூறுவதில் தவறில்லை. நீங்கள் இறைவனுடன் ஒன்று பட்டிருக்க விரும்பினால், மனிதனுடன் ஒன்றுபட வேண்டும். சாதி என்பது ஒரு சமூகச் சாபக்கேடாக இருப்பதோடன்றி அரசியல் தவறுமாகும் . . . இந்தக் குறிப்பை வலியுறுத்துவதில் டாக்டர் ரெட்டி மிகு திறத்தால் அளவுமீறிச் சென்றுவிட்டார் என்றே தோன்றுகின்றது. ஏனெனில், சமூகம்பற்றிய விளக்கக் குறிப்பு மட்டிலும் ஒருவரைச் சிறந்த கவிஞராக்க முடியாது. சிறந்த கவிஞராதற்கு நடை, கலைத்திறம்மிக்க கவர்ச்சியாற்றல், முடிவான கருத்தைத் தருவதில் ஒருவித அடக்கம் ஆகிய மற்றைய கூறுகளும் உள்ளன. ஆல்ை, நீண்ட நாட்களாக நிலவியிருந்த புறக்கணிப்பு, வெறுப்பு ஆகிய வற்றின் விளைவுகளை அகற்றும் செயலில் இந்த அளவுமீறிய வற் புறுத்தல் பயன்பட்டிருக்கலாம். கவிஞர் என்ற முறையிலும் திறனாய்வாளர் என்ற முறை யிலும், ரெட்டியவர்கள் நமக்கு அளித்த இலக்கியங்கள் அளவில் குறைவாக இருப்பினும் அவற்றின் தாக்கம் உயிர் நிலையானது; குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றிய ஆசிரியர்களின் நூல்கள் மறக்கப் பெற்றிருக்கும்பொழுது (இது ஒரு நல்ல காலமே) இவர்தம் நூல்கள் தெலுங்கு இலக்கிய அறிஞர்களின் சிந்தையுடன் கலந்து ஐக்கியமாகிவிட்டன.