பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராமலிங்கா ரெட்டியவர்களின்...முக்கிய நிகழ்ச்சிகள் 77 1916-17 மைசூர் மகாராசர் கல்லூரியில் முதல்வராகப் பணி. 1921 சென்னையில் அரசியலில் நுழைதல். 1922-26 சென்னைச் சட்ட மன்ற ஆலோசகர் அவைக்குத் தேர்ந் தெடுக்கப்பெற்று உறுப்பினராகப் பணிபுரிதல். 1924 ஆந்திர மகாசபையின் தலைவர். 1926 ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் துணை-வேந்தராக நிய மனம் பெறல். 1930 அரசின் அரசியல் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் முறையில் துணை-வேந்தர் பதவி யைத் துறத்தல். 1935 சென்னைச் சட்டமன்ற ஆலோசகர் அவைக்குத் தேர்ந் தெடுக்கப் பெறல். 1935-36 சித்துரர் மாவட்ட வாரியத்தின் தலைவர். 1936 ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் துணை-வேந்தராகத் தேர்ந் தெடுக்கப்பெறல். 1937 பல்கலைக் கழக வாரியத்தின் தலைவர். 1942 பிரிட்டிஷ் அரசு வீரப் பெருந்தகை (Knight) என்ற பட்டம் வழங்குதல். 1949 சனவரி - மைசூர் அழைப்பு - மைசூர் அரசின் கல்வி நிலைமை பற்றிய அறிக்கை தயாரித்து வெளியிடல். 1949 செப்டம்பர் - மைசூர் பல்கலைக் கழகத்தின் இணை-வேந்த ராகப் பொறுப்பேற்றல். 1951 பிப்பிரவரி 24 - சென்னையில் இயற்கை எய்தல். பின்னிணைப்பு-2 செயல் வழியில் இலக்கியம் (வீரேசலிங்கத்தின் நூல்பற்றி டாக்டர் சி. ஆர். ரெட்டியின் புகழுரை) "கைம்பெண் மறுமணத்தின் காரணமாக வீரேசலிங்கம் பொதுமக்கள் உள்ளத்தில் அதிகமாகத் தொடர்பு கொண்டிருந்த போதிலும், அவர் ஒரு பெரிய போதகர்; புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் இலக்கியத்தைச் செயல் வழியில் பயன்படுத்தினர், அவர்