பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 டாக்டர் சி. ஆர். ரெட்டி கருதார். இந்த அறிஞர் தெலுங்கு மொழி என்ற கடிகாரத்தைப் பின்னேக்கித் தள்ளி வைத்தார் என்று சிலர் வாதிடுவர்; ஆயினும், இலக்கண ஆசிரியராகவும் உரைநடை ஆசிரியராகவும் இவர் ஆற்றிய பங்கினை எவரும் எளிதில் புறக்கணிக்க இயலாது. ஆனால், மரபு நிலையினின்றும் இவர் சற்று விலகிச் சென்றவராக மதிப்பிட லாம். கந்துக்கூரி வீரேசலிங்கம் பந்துலு முதலில் இவரை ஒரு முன்மாதிரியாகவும் பின்னர் ஒருவிதமான முன்னெச்சரிக்கையா கவும் கொண்டார். அப்படிக் கொண்டிராவிடில், அவர் நவீன கலைவடிவங்களை மலரச் செய்த முனைவராகவும் எளிய இனிய தெலுங்கு உரைநடை ஆசிரியராகவும் வளர்ந்திருக்க முடியாது. உயர்தர ஆங்கில இலக்கியங்களில் தாக்கமும் அவரை இந்நிலைக்குக் கொணர்ந்தது என்பதும் தெளிவு. இதே மூலமுதலால் இன்னும் அதிகமான தாக்கம் பெற்றவர் டாக்டர் சி. ஆர். ரெட்டி என்பவர். வீரேசலிங்கம், சின்னய்ய சூரி இவர்களிடமிருந்தும் பொதுவான சில கூறுகளையும் இவர் பெற்ருர் எனலாம். முன்னவரின் சமுதாய நோக்கும் புத்தமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் இயல்பும், பின்னவரின் உயர்தர இலக்கியத்தின் மீது கொண்ட ஒருதலைப் பற்றும் மரபுவழக்கின்மீது கொண்ட மதிப்பும் டாக்டர் ரெட்டியிடம் பலன் தரக்கூடிய சந்திப்பு இட மாக அமைந்தன. சின்னய்ய சூரி இவரது தனிப்பற்றுக்குரிய உரை நடை எழுத்தாளர்; வீரேசலிங்கம் இவரது அன்புக்குரிய எழுத்தாளர். இவரது கையில் உருப்பெற்ற இசை விணக்க முடைய உரைநடையினின்றும் இதனைக் கண்டு தெளியலாம். மேல்நாட்டுச் சிந்தனைப் போக்குகளைத் தன்னகத்தே கொண்டும், ஆனல் தம்மைத் தம்முடைய எளிமையான உறுதிப் பிணைப்பினின்றும் விடுவித்துக்கொள்ளாமல் இருக்கும் சமகாலத்து இந்தியப் புலவர் ஒருவரை அண்மைக் காலத்திலுள்ளதைப்போல் இப்பொழுதும் காண்பதென்பது குறிப்பிடத்தக்க ஓர் அரிய நிகழ்ச்சியாகும். தம்முடைய தாக்கத்தின்மீது கொண்ட குறுகிய மனப்பான்மையுடன் ஒருங்கே காணப்பெறும் மேல்நாட்டு அறி வில் கணிசமான அளவுக்குப் பெற்ற பயிற்சியுடைய அறிவாற்ற லுள்ள ஒருவரை நாம் இங்குப் பொதுவாகக் காண்கின்ருேம். கன்னடமொழியில் பி. எம். சிரீகண்டய்யாவும், தமிழில் பி. ஆர். இராஜம் அய்யரும், இந்தியில் இராமச்சந்திர சுக்லாவும், வங்காளத்தில் மைக்கேல் மதுசூதன் தத்தும் ஆன புதுப்போக்கின் முன்னோடிகளுடன் பல்வேறு முறைகளில் ஒப்பிட்டுக் காணக்கூடிய டாக்டர் ரெட்டி இயக்க ஆற்றல் மிக்க உருவமாக நம்முடைய கவனத்தை ஈர்க்கின்ருர். இவரைத் தெளிவாகப் புரிந்துகொள்வ தென்பது, பல்வேறுபட்ட மரபுகளின் மோதல்களைப்-ஒருமட்டத் தில் ஐரோப்பிய மரபும் இந்திய மரபும், மற்ருெரு மட்டத்தில்