பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர் சி. ஆர். ரெட்டி தெலுங்கு மொழியில் மிகச்சிறந்த தேர்ச்சியாளர்; அம்மொழியில் மிகப் பெரிய எழுத்தாளர்களுள் ஒருவர்' வீரேசலிங்கம் பந்துலுவுக்கு இத்துடனும் மற்றைய புகழ் உரைகளுடனும் ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் துணை-வேந்தரான டாக்டர் சி. ஆர். ரெட்டியவர்கள் சென்னையில் நடைபெற்ற இத் தலைவரின் நூற்ருண்டுப் பிறந்தநாள் விழாவினைத் தொடங்கி வைத்தார் (1948 ஏப்பிரல் 16). டாக்டர் ரெட்டியவர்கள் தம் தொடக்க உரையில் கூறியவை: சிப்பாய் கலகம் நடைபெற்ற சில ஆண்டுகட்கு முன்னர் தான் வீரேசலிங்கம் தோன்றினர். ஜான்சி இலக்குமிபாய் போன்ற தனிப்பட்டவர்களின் மேம்பாடும் வீரமும் இருந்தபோதிலும், தோல்வியுற்ற ஒருமுகப்படுத்தம்பெருத இயக்கங்களுள் இது மற் ருென்று. இந்தியா மிக ஆழ்ந்த இருளிலும் நம்பிக்கை இழந்த நிலையிலும் தள்ளப்பெற்றது. உள்நாட்டு ஒற்றுமையும் படிப்படி யாக முன்னேறுகின்ற தற்காலப் புதுமையின் திசையில் மாற்றமும் இல்லாமல் மதிப்பான பயன்விளையத்தக்க எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை இல்லை என்பதை முற்றிலும் நன்ருக அறிந்து, சிந்தனை யாளர்கள் இந்துக்களினிடையே நிலவியிருந்த வலுவின்மையை நன்கு உணர்ந்தனர். மூன்று தலைவாய்களினின்றும் ஒளி துலங்கத் தொடங்கியது. இராசாராம் மோகன்ராய் என்பார் ஒரளவு ஐரோப்பிய முன்மாதிரி அடிப்படையில் அமைந்த வழிகளில் நம்முடைய பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் திருப்பி அமைக்க முயன்ருர். அவர் திருமறைகளையும் உபநிடதங்களையும் தமது ஆதாரப் பொரு ளாக இருக்க நாடினர். ஆனல், அவர்தம் கோட்பாடுகளின் முக்கிய பகுதியும் அவர்தம் மனநிலையும் மேட்ைடு முறையைச் சார்ந்திருந்தன. ஆனல் நம்முடைய தற்பெருமையைவிடவும் அதிக மாக நம்முடைய பகட்டெண்ணம் மீறி எழுந்தது; மேனுட்டுப் போலி நடத்தை என்று ஏளனம் செய்ததற்கு எதிராக இன்னும் மீறி எழுகின்றது. பிறருடைய கருத்துகளை நாம் நம்முடையன வாகச் செய்துகொள்ளும்போது அம்முறை இழிவானது எனத் தோன்றுகின்றது. ஏற்றுமதிச் சரக்குகள் பற்ருக அமைகின்றன; இறக்குமதிச் சரக்குகள் வரவாக அமைகின்றன. இராம் மோகன்ராய் ஆங்கில மொழியைப் பயன்படுத் தினர்; இந்தியாவில் ஆங்கில மொழியின் நிலை காரணமாக அவர் தந்த செய்தி வங்காளத்தில் மட்டிலும் அடைத்து வைக்கப் பெற 1. இந்திய வரலாற்றில் இது பிரிட்டிஷார் தந்த பெயர். இது தவருனது. நாடு விடுதலை பெற்ற பிறகு இது 'முதலாம் விடுதலைப் போர் என்ற பெயர் பெறுகின்றது.