பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் வழியில் இலக்கியம் 79 வில்லை; அது நாடு முழுவதும் எட்டியது. ஆனல் அவர்தம் செல்வாக்கு முக்கியமாக உள்ளூர் சார்ந்ததாகவும் மாகாணத்திற் குரியதாகவும் இருந்தது. இந்தியாவில் மேற்குப் பகுதியில் தயானந்த சரசுவதி என்ற வீருர்ந்த வீரமுள்ள பெரியவர் தோன்றினர்; இந்த உருவம் திருமறை மலையினின்றும் உருவானது. சமத்துவம் இக்காலப் புதுமையின் முன்னேற்றம் என்ற இரட்டை அடிப்படையில் இந்து சமூகத்தை உருமாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த உரு மாற்றம் திருமறைக் கோட்பாடுகளினல் வேர்விடச் செய்யப் பெற்று, வடிவம் பெறப்பெற்று, இயக்கப் பெற்றது. மேலும், அம்மாற்றம் நம்முடைய பெருமிதமான பண்டைய எளிமைக்கும் வலிமைக்கும் திரும்பும் நிலையில் அமைந்தது. ஆரிய சமாஜம் என்ற அமைப்பு மிகவும் ஊக்கமும் எதிர்ப் பார்வமும் கொண்டதாகும்; இது விருந்தினரை வரவேற்கும் அறையில் வேடிக்கையாகப் பேசப்பெறும் சமயம் அன்று. ஆரிய சமாஜத்தைச் சார்ந்தவர்கள் பண்டைய திருமறை ஏரியை வழிபடு கின்றனர். அஃது அடல்வாய்ந்த அமைப்பாகும். கிட்டத்தட்ட அதே காலத்தில் மூன்ருவது ஒளியொன்று இருந்தது; அது மாறுபட்டது; தன் வழியில் அது இந்நிலவுலகி லேயே மிகவும் வீறமைதியுடையதாக இருந்தது. அந்த ஒளிதான் இராமகிருஷ்ண பரமஹம்சர் வடிவில் இருந்த பேரொளியாகும். பெரிய சீர்திருத்த வாதி: ஆன்மாவின் இந்தச் சிற்றசைவுகள் தோன்றின. இந்தக் காலத்தில் வேறு சீர்திருத்தவாதிகளும் தோன் றினர். இவர்களுள், பலவகைகளில், மிகப் பெரியவராகவும், மிகவும் வியப்புக்குரியவராகவும் இருந்தவர் வீரேசலிங்கம் என்பவராகும். இதனைச் சற்றுச் சிந்தியுங்கள்: எளிய சாதாரண தெலுங்குப் பண்டிதர் ஒருவர் மக்களின் நடுவே ஒரு வீரராகவும், அவர்தம் போரிடும் தலைவராகவும், எல்லாத் துறைகளிலும் மிகவும் செய லருமை வாய்ந்த சமூகச் சீர்திருத்தத்தின் முன்னேடியாகவும் மலர்ந் ததை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஒரு வட மொழிப் பண்டிதர், தமிழ்ப் பண்டிதர், கன்னடப் பண்டிதர், அல்லது மலேயாளப் பண்டிதர் அல்லது ஏதோ ஒரு பண்டிதர் தனியாக ஒதுக்கப்பெற்று, அசட்டை செய்யப்பெற்ற பண்பாட்டுச் செல்வாக்காகவும், வகுப்பில் வல்லந்தமாகச் செயலாற்றும் எழுச்சி யையுடைய மாளுக்கர்களின் ஏளனத்திற்கு இடமானவராகவும் இருந்ததற்கு மேலாக எப்படியாவது இருந்ததைக் கேட்டிருக்க முடியுமா? வைதிகத்தை எதிர்த்த ஒரு பண்டிதர்; அதுவும் இந்தியா இன்றிருப்பதைவிடத் தற்கால நிலைமைக்குச் சிறிதும் பொருந்தாத வெளிநாட்டு, முற்போக்குக் கொள்கைத் தொடர்புகளினின்றும் துண்டிக்கப்பெற்ற ஒருவர். காலநிலைமைகள் அவருக்கு எதிராகத்