பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர் சி. ஆர். ரெட்டி தானிருந்தன; ஆனால், ஒரு தாவீது ஒரு கோலியத்தை எதிர்த்து நின்றதைப்போல், காலநிலைமைகளை எதிர்த்துப் போராடினர்; இறுதியில் வெற்றியும் பெற்ருர், இங்கு இராசாராம் மோகன்ராயைப் போல் வீரேசலிங்கம் ஒர் உயர்குடிமகன் அல்லர்; அடக்கச் சிதைவின்றி உரிமையாகக் கொள்ளப்பெற்ற துறவுக் கோலத்தால் பல்லோரையும் கவரத் தக்க மதிப்புணர்ச்சியும் நன்மதிப்பும் கொண்ட தயானந்தரைப் போல ஒரு சூரருமல்லர். எனினும், இராசாராம் மோகன்ராய் அல்லது தயானந்தர் மேற்கொண்டு நடத்தின போரைப்போல் வீரேசலிங்கமும் எதிர்த்து நின்று கடுமையாகப் போரிட்டார். பார்ப்பனர்களின் வைதிகத்தையும், நாம் எளிதில் சினங்கொள்ளக் கூடிய சிற்றின்பத் துறையையும் கைம்பெண் மறுமணமும் கொண்ட இதன் கூருணர்வுடைய முக்கிய பகுதியையும் எதிர்க்க வேண்டியிருந்தது. தமக்கு ஆதாரப் பொருளாகச் சாத்திரங்களைக் கோரினர்; ஆனால் தயானந்த சரசுவதியின் எடுப்பான மேலாண்மை உரிமையைவிட இராசாராம் மோகன்ராயின் காரணம் காட்டி வாதிடும் முறையையே இவர் மேற்கொண்டார். தெய்விகத்தையோ அல்லது தேசியத்தையோ இவர் ஆர்வத்துடன் கோரவில்லை. இந்தச் சச்சரவில் கடவுளையோ சுயராஜ்யக் கோரிக் கையையோ சேர்த்துக்கொள்ளவும் இல்லை. சாரமாகக் கூறினால், வீரேசலிங்கம் ஒரு பகுத்தறிவு வாதி யாகவும் அருளிரக்கம் கொண்டவராகவும் திகழ்ந்தார். ஆகவே, இவரது முறையீடு பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும் பொது அறிவுக்கு உகந்ததாகவும் நீதியையும் சமஉரிமையையும் விரும்பும் முறை யிலும், எல்லோரிடமும் பாய்ந்தோடும் மனிதனிடம் காட்டும் இரக்கப்பாங்கிலும் அமைந்திருந்தது. இவர் உ. க் கிர மான எதிர்ப்பைச் சந்தித்தார். தன்னுடைய இல்லத்தைத் தீக்கிரை யாக்கும் முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பெற்றன என்றும், இராசமகேந்திரபுரத்து மாளுக்கர்கள் கடமையுணர்வாலும் பற்று றுதியாலும் உந்தப் பெற்று, எவ்வாறு தம் இல்லத்தைக் காக்கத் துணிந்தனர் என்றும் இவர் என்னிடம் கூறினர். சீர்திருத்தச் செயல்களை மக்களிடம் பரப்புவதற்காகத் தம்முடன் சேர்ந்த நண்பர்கள் நேர்மையான வாய்ப்புகள் அவர்கட்கு இருந்தும் தம் முடைய வீட்டில் அத்தகைய சீர்திருத்த முறைகளை மேற்கொள்ள மறுத்த காட்சிதான் இதயமே வெடித்துவிடக்கூடிய தம்முடைய அநுபவங்களுள் ஒன்ருகும் என்றும் என்னிடம் தெரிவித்தார். இவர் தெரிவித்தவர்கள் யாவரும் இறந்துவிட்டதால் நான் அவர்தம் பெயர்களைக் கூற விரும்பவில்லை; உயிரற்ற இறந்தகாலம் அதன் இறப்பைப் புதைக்கட்டும்' என்று இவர் கூறினர். வீரேச லிங்கம் உயிர் வாழ்கின்ருர்; வாழ்ந்திருக்கும் சாவாதவரைப் பற்றிச் சிறிது பகர்வோம்.