பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல் வழியில் இலக்கியம் 81 ஆற்றல் மிக்க அங்கத ஆசிரியர்: இலக்கியத்தைச் செயல் வழியில் பயன்படுத்தினர். தமது அங்கதங்களில்-அவற்றுள் சில மாலியரால் (Moliere) ஊக்குவிக்கப்பெற்று மிகச் சிறப்பாக எழுதப்பெற்றவை; (தெலுங்கில் இவை பிரஹசனங்கள் என வழங்கப்பெறும்)-இந்து சமூகத்தை வசையால் தாக்கினர்; இந்து சமயத் தலைவர்கள்மீதும் கூட கருணையின்றி வசைமாரி பொழிந் தார். வஞ்சப் புகழ்ச்சியாக எழுதுவதிலும் ஏளனக் குறிப்பைக் காட்டுவதிலும் கைதேர்ந்த மன்னர்". பிறப்பிலுைம் வளர்ப்பின லும் பாசாங்குக்காரர்கள் என்று தாம் கருதும் வைதிகர்களையோ அல்லது பழம் பற்ருளர்களையோ அவர் விட்டு வைக்கவில்லை. அவர் சாத்திரம் கற்ற தம் எதிரிகளிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பது என் கருத்து; அவர்களின் பெரும் பாலோரின் தீர்ப்புகளைப்பற்றி நாம் என்ன நினைத்தாலும், அவர்கள் உண்மையாகவும் மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தனர். ஸ்விப்டின் கல்லிவெரின் யாத்திரை என்ற நூலைப் பின்பற்றி எழுதிய தனது சத்திய ராஜா பூர்வதேச யாத்ரலு என்ற நூலில் பெண்கள்பால் ஆண்கள் இழைத்த தவறுகளையும் அநீதிகளையும், அப்படியே திருப்பிய முறையில் பெண்களின் கொடுங்கோலாட்சி யில் ஆண்கள்படும் அல்லல் காட்சிகளையும் காட்டியுள்ளார். ஹெயின் என்ற செருமானிய எழுத்தாளரைப்பற்றிக் குறிப் பிடுங்கால், அவருடைய கல்லறை நடு கல்லில் பொறிக்கப்பெற வேண்டியது எழுதுகோல் அன்று, வாளே என்று சொல்லப் பெற் றுள்ளது. அதுபோலவே, வீரேசலிங்கம் அவர்களின் கல்லறை நடு கல்லில் அல்லது வேறு நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பெற வேண் டியது வாளேயன்றி, எழுதுகோல் அன்று என்று சொல்ல வேண்டும்; ஆந்திர நாட்டில் இவர் சமூகத்தில் எழுப்பிய ஒசை விளைவினைக் கொண்டு எண்ணினல் ஓர் அணுகுண்டையே இதில் பொறிக்கலாம். மக்கள் கைம்பெண் மறுமணத்துடன் வீரேசலிங்கத்தை அதிக மாகத் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். கைம்பெண் மறு மணமே இவர்தம் திட்டத்தில் மிகவும் மன எழுச்சியை ஊட்ட வல்ல பகுதியாகும்; இதுவே பொதுவாக இந்துக்களினுடையவும் குறிப்பாகப் பார்ப்பனர்களுடையவுமான பித்த நீரையும் குருதி யையும் கலக்கிச் சீற்றத்தை எழுப்பியது. ஆனால், இவர்தம் திட்டம் பலகூறுகளையும் தழுவியதாகவும் வாதப் பொருத்தமுடையதாக வும் இருந்தது. பெண்கல்விபற்றியும், அவர்தம் உரிமைகள் பற்றி யும் பொதுவாக ஆண்களுடனும், தம் கணவன்மார்களுடனும் சமமான மதிப்பு நிலைபெறுதல் பற்றியும் இவர் அதிகமாக 2. வசைபாடக் காளமேகம்' - என்ற தொடரையும் அதில் குறிப்பிடப்பெற்றுள்ள காளமேகப் புலவரையும் நினைக்கச் செய்கின்ருர்,