பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர் சி. ஆர். ரெட்டி ஆதரித்துப் பேசினர். தனக்கு நேரிட்ட எதிர்ப்பு காரணமாகவும் மக்களின் வெறுப்பு காரணமாகவும் இந்த நேர்மையான அஞ்சாத ஆன்மா சிறிதும் பின்வாங்கவில்லை. மிகவும் பற்றுறுதியுடன் பின் பற்றுபவர்களும் தொண்டர்களும் அடங்கிய சிறு கும்பல் இவரை எப்பொழுதுமே சூழ்ந்தவண்ணம் இருந்தது. தெலுங்கு நாடு முழுவதும் இவரது நூல்கள் நன்கு விலையாயின. அஞ்சல் கட்டணம் இன்றிருப்பதைவிடக் குறைவாக இருந்த அவர் காலத்தில் கிட்டத் தட்ட ஒரு தெலுங்குப் பண்டிதரின் திங்கள் ஊதியத்திற்குச் சமமான ரூ. 30-ஐ இவர் அஞ்சல் தலைகளை வாங்குவதில் செல விட்டதாக என்னிடம் இவர் சொல்லக் கேட்டுள்ளேன். தம்முடைய நூல்களைக்கொண்டு இவர் அதிகமாகப் பணம் பண்ணினர் என்பதற்கு ஐயமில்லை; ஆனால் பணம் பண்ணுவது அவருடைய நோக்கம் அன்று. வைதிகத்தைப் பலமாக அடித்துத் தூள்தூளாக்கி மண்ணுடன் கலக்கச் செய்வதே அதன் முக்கிய நோக்கமாகும். படிப்படியாக, மனவுறுதியான பகுத்தறிவுடனும், மனிதப்பற்றுக் கோட்பாட்டுடனும் கொண்ட தமது வழியில் மேல் நோக்கியும் முன்நோக்கியும் முன்னேறினர். இறுதியாக, தம் முடைய பூணுாலையும் களைந்தெறிந்து விட்டார்; அத்துடன் தாம் பிறந்த சாதிக்கும் வைதிக இந்து சமயத்திற்கும் ஒரு தலைமுழுக்குப் போட்டுவிட்டார். இவர் தாம் கண்ட பிரமோதியக் கொள்கை புறத்தே பிறந்து வளர்ந்த யாதொன்றினின்றும் அமைத்துக் கொள்ளப்பெற்றதன்று; அது தம்முள்ளே கிடந்த நம்பிக்கையினின் றும் தோன்றின நேரிய எளிய வளர்ச்சியே ஆகும். என்ருலும், இவர் தம்மை ஒரு பிரமோ என்று சொல்லிக் கொண்டார் என்று கருதுகின்றேன். எழுத்தாளர்: வீரேசலிங்கம் தெலுங்கு மொழியைக் கரை கண்ட வித்தகர்; சமகாலத்திய தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் காளிதாசரின் இலக்கியங்களையும் பிற பண்டைய இலக்கியங்களையும் மொழி பெயர்த்தார். சுத்தாந்திர கிரோஷ்டிய கிர்வசன நைஷதம் என்ற நூலில் காணப்பெறும் மிக உயர்ந்த செயற்கை முறையிலமைந்த நடையிலும் எழுதினர். இவர் இலக் கியத்தை இனிமையாகவும் மிகச் சிறந்த சுவையுடனும் படைக்கக் கூடியவராகத் திகழ்ந்தார். அன்றியும், மக்களை மனம் கவரக்கூடிய சொற்சிலம்ப விளையாட்டுகளையும் நிறைவேற்றக்கூடியவராகவும் விளங்கினர். தெலுங்கு உலகில் நடப்பில் செல்லுபடியாகின்ற நாணயத் தின் ஒரு பகுதியாகத் திகழும் புதினம், அங்கதம் என்ற இரண்டு வகை இலக்கியங்கட்கும் புதுவது புனைந்தவராகத் திகழ்ந்தார். செயல் வீரர் என்ற முறையில்தான் இறவாப் புகழையும் இமயம் முதல் குமரிவரை உள்ள இந்து சமூகம் முழுவதின் நிலையான