பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. ஆர். ரெட்டியின் படைப்புகள் 83 நன்றியுணர்வுப் பட்டத்தையும் இவர் பெற்ருர். இன்று பெண் களுக்குச் சொத்துரிமைகள் கிடைத்துள்ளன என்பதற்கும், குழந்தை மணங்கள் மனித இனத்தின் பாவமாக இருப்பதுபோல் அவை சட்டத்தின் ஒரு குற்றமாக்கப்பெற்றுள்ளது என்பதற்கும், கைம்பெண் மறுமணங்கள் திறனயும் அளவுக்கு மிகச் சாதாரண மாக நடப்பதற்கும், இந்து சமயத்தில் சட்டத்திற்குட்பட்ட திருமணங்கள் நடைபெறுவதற்கு முழுஉரிமை இருப்பதற்கும், சாதி இத் துறை யி ல் ஆதிக்கஞ் செலுத்தாதிருப்பதற்கும், நாம் வீரேசலிங்கத்தின் இறவா நினைவாக மீப்புகழும் நன்றியும் கலந்த விளக்கை ஏற்றுவோம். நம்முடைய மக்களை, சிறப்பாகப் பெண்களை, வழிபாட்டுணர்வுடனும் பூசனை நினைவுடனும் கை கூப்பி வணங்கு மாறு கேட்டுக்கொள்வோம். இந்தியாவில் இன்றைய நிலையில் சமூகத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள், அரிசன மக்கள் திருக்கோயில்களில் நுழை தல், உணவு விடுதிகள் முதலியவற்றில் சமூக வேறுபாடு காட் டாமை போன்றவை குறித்துச் சட்டம் இயற்றப்பெற்றுள்ளது. அண்மையில் நிறைவேற்றப்பெற்ற சட்டங்கட்குப் பொருளுரைப்ப திலும், பெரிய சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றுவதிலும் மக்கள் திரள்களினிடையே கருத்துகளைப் பரப்பும் முறையிலும் செயலாற்றும் பாங்கிலும் நாம் அதிகப் பங்கு கொள்ள வேண்டியுள்ளது. கருத்துகளைப் பரப்பும் பணியிலும் நடைமுறையில் அவற் றைக் கொணரும் போக்கிலும் நம்மை நாம் உரிமையாக்கிக் கொண்டு வீரேசலிங்கத்திற்கு நம்முடைய பாராட்டுதலையும் நன்றி யுணர்வையும் மெய்ப்பித்துக் கொள்வோமாக. பின்னிணைப்பு-3 பயன்பட்ட நூல்கள் டாக்டர் சி. ஆர். ரெட்டியின் படைப்புகள் தெலுங்கு 1. கவித்துவ தத்துவ விசாரமு (கவிதையின் இயல்புபற்றிய திறனாய்வு) திறய்ைவு (1899)-ஆந்திரப் பல்கலைக் கழகம், 1941