பக்கம்:சி. ஆர். ரெட்டி (மொழிபெயர்ப்பு).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமை வாழ்க்கை 7 ஆரிய மரபும் திராவிட மரபும்-புரிந்துகொள்வதாகும். நிகழக் கூடியவைதாம் என்று நாம் கருதினால், உண்மையிலேயே பயன் அளிக்கவல்ல மோதல்களே இவை என்று கூறலாம். இயல் இரண்டு இளமை வாழ்க்கை ஆந்திர மாநிலத்தில், சித்துரர் மாவட்டத்தில், கட்டமஞ்ச்சி அமைதிச் சூழ்நிலையிலமைந்த ஒரு சிற்றுார். சித்துனருக்குக் கீழ்பா லுள்ள இவ்வூர் இன்று நகரமைப்பு எல்லைக்குள் சேர்க்கப் பெற்றுள்ளது. ஆங்கில எழுத்தாளராகிய கோல்டுஸ்மித் வாழ்ந்த ஆபர்ன் என்ற சிற்றுாரைப் போலவே, இவ்வூரும் இங்கு வாழும் குடிமக்களுக்கு 'மலையிடைத் தாழ்வெளியிலுள்ள காட்சிக்கினிய வனப்புமிக்க'தாகத் திகழ்கின்றது. ஓராண்டுக் காலத்தில் மூன்றே நாள் வெள்ளம் பெருகியோடும் நீரோடையொன்றையும், மூன் ருண்டுகட்கொருமுறை நிரம்பும் குளம் ஒன்றையும் மெச்சிப் பேசி மகிழ்வர் இவ்வூர்ப் பெருமக்கள். மாந்தோப்புகளும் தென்னஞ் சோலைகளும் சூழ்ந்து பசுமையாகக் காணப்பெறும் இவ்வூர் மக்க ளுக்குக் குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கவல்ல இன்ப கரமான இடமாகும். தென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு பேரறிஞர்கள் இந்த ஊரில்தான் தோன்றினர். இந்திய தேசிய காங்கிரசின் தலை வராகத் திகழ்ந்த முதல் ஆந்திரர் பி. அனந்தாச்சார்லு என்பார் ஒருவர்; கல்வியாளர், அரசியல் சிந்தனையாளர், கட்டுரையாளர், பொருளியலறிஞர், கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர் ஆகிய அனைவரும் திரண்டு ஒருவராகத் திகழும் கட்டமஞ்ச்சி இராம லிங்கா ரெட்டி என்பார் மற்ருெருவர். இராமலிங்கா ரெட்டி 1880-ம் ஆண்டு திசம்பர் 10-ம் நாள் பிறந்தார். ஆந்திர மாநிலத்து ரெட்டிமார் உடல்வலி மிக்க உழவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்: இவர்தம் கடும் உழைப்பு, விருந் தோம்பல், துணிவு, பண்பு நலம் ஆகியவை யாவரும் அறிந்தவை