பக்கம்:சீதா கல்யாணம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 சீதா கல்யாணம்

அயோத்தியா காண்டம்

சில வருஷங்கள் சென்றன. தசரதனுக்கோ முதுமைப் பருவம் வந்தது. தன் சீமந்த புத்திரனான இராமனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு தான் காட்டில் சென்று தவம் செய்ய விரும்பினான். இராமன் முடிசூடப்போகிறான் என்பதை அறிந்த நகர மக்கள். எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். அயோத்தி நகரமும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டது. இந்தச் சமயத்தில், கிழக்கூனியான மந்தரையின் சூழ்ச்சியால், கைகேயி தசரதனிடம் தான் முன்னர் பெற்றிருந்த இரண்டு வரங்களைப் பெறுகின்றாள். பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது ஒரு வரம்; இராமனைப் பதினான்கு வருஷம் காட்டிற்கு அனுப்ப வேண்டுமென்பது மற்றொரு வரம். இதைக் கேட்ட தசரதன் மனம் உடைந்து வருந்தினான். தந்தை சொல் காப்பது தன் கடன் என்று உணர்ந்த இராமன் காட்டிற்குப் புறப்பட்டான். இலக்குமணனும் சீதையும் உடன் சென்றார்கள். நகர மாந்தர்பட்ட துயருக்கோ அளவில்லை. தசரதனோ, புத்திர சோகத்தால் மாண்டான்.

அயோத்தியில் இத்தகைய சம்பவம் நடக்கும் போது கேகய நாட்டிலுள்ள தன் மாமன் வீட்டிற்குச் சென்றிருந்தான் பரதன்.அவன் அயோத்திக்குத் திரும்பி வந்ததும் நடந்ததை அறிந்து, அளவில்லாத துன்பம் அடைந்தான். இப்படிப்பட்ட ஒரு பெரும் பழியைத் தேடி வைத்த தன் தாயாரைக் கடிந்தான். இராமன் சென்ற காட்டிற்கே சென்று, அவனை அயோத்திக்குத் திரும்பி வந்து அரசாளும்படி வேண்டினான். இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/16&oldid=1367755" இலிருந்து மீள்விக்கப்பட்டது