பக்கம்:சீதா கல்யாணம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. அவையடக்கம் -

ஒர் ஆசிரியர் எவ்வளவுதான் கல்விகேள்விகளில் வல்லவராயிருந்தாலும், தாம் செய்ய இருக்கும் நூலினை உலகத்தார் எவ்விதம் ஏற்றுக் கொள்வார்களோ என்று அஞ்சியவராய், உலக மக்களாகிய சபையினரிடம் தமது அடக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுதல் ஒரு மரபாக இருந்து வருகிறது. இதைத்தான் அவையடக்கம் என்பார்கள். கம்பர் இம்மரபை ஒட்டியும், வால்மீக முனிவர் எழுதிய இராம கதையைத் தமிழில் எடுத்துச் சொல்லுவது உண்மையாகவே மிகவும் கஷ்டசாத்தியமான காரியம் என்பதை உணர்ந்தும்,அவையடக்கம் கூறுகிறார். வால்மீகர் இவ்வுலகுக்குத் தந்தருளிய இப்பெரிய இராம கதையைத் தமிழில் ஆர்வத்தோடு தாம் எழுத முனைந்திருப்பது, பரந்த பாற்கடல் முழுவதையும் ஒரு சிறு பூஜை நக்கிக் குடித்துவிட முயலுவது போலத்தான் இருக்கிறது என்று கம்பர் அடக்கமாகக் கூறுகிறார். சிறு பிள்ளைகள், தரையிலே கோடுகள் இழுத்து, இது வீடு, இது அரங்கம்’ என்றெல்லாம் விளையாடுகின்ற போது, சிற்ப நூல் வல்லார், இது சிற்ப சாஸ்திரத்தில் சொல்லப்பட்டபடி யில்லை’என்று எப்படிக் குற்றம் சாட்ட மாட்டார்களோ,அதுபோலக் கற்றறிந்த பெரியார்களும் தம்முடைய நூலில் காணப்படும் குற்றங்களைப் பொருட்படுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/21&oldid=1367853" இலிருந்து மீள்விக்கப்பட்டது