பக்கம்:சீதா கல்யாணம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சீதா கல்யாணம்

சுய உருவை அடைந்து நின்றாள். அவள் கல்லுரு அடைந்த கதையை விசுவாமித்திரர் இராம, லக்குமண ருக்கு எடுத்துரைத்தார்.இராமனது பரத ஸ்பரிசத்தால் அகலிகை சாப விமோசனம் பெற்றதைப் பாராட்டி விசுவாமித்திரர் அவனைப் புகழ்ந்தார்:

'இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம், இனி இந்த உலகுக்கு எல்லாம் உய் வண்ணம் அன்றி மற்று ஓர்

துயர் வண்ணம் உறுவது உண்டோ? மை வண்ணத்து அரக்கி போரில்,

மழை வண்ணத்து அண்ணலே! உன் கை வண்ணம் அங்கு கண்டேன்,

கால் வண்ணம் இங்கு கண்டேன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/44&oldid=651198" இலிருந்து மீள்விக்கப்பட்டது