பக்கம்:சீதா கல்யாணம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மிதிலையை இராம , லக்குவர் காணுதல்

சிTப விமோசனம் பெற்ற அகலிகையைக் கெளதமனிடம் சேர்த்துவிட்டு, முனிவரும் குமரரும் மிதிலா நகரத்தை நெருங்கினார்கள். மிதிலாநகரம், தன் மதில்களின் மேலே பறக்கும் கொடிகள் என்னும் கைகளை நீட்டி, இலக்குமியாகிய சீதை தன்னிடம் இருக்கிறாள் என்றும், திருமாலாகிய இராமன் அவளைச் சீக்கிரம் அடைவதற்கு வந்து சேர வேண்டும் என்றும் சொல்லி அழைப்பது போலிருந்தது.

'மை அறு மலரின் நீங்கி, -

யான் செய் மாதவத்தின் வந்து செய்யவள் இருந்தள் என்று, - செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி, அந்தக் - கடிநகர், கமலச் செங்கண் ஐயனை, 'ஒல்லை வா' என்று . அழைப்பது போன்றது, அம்மா!

(மை அறு-குற்றமற்ற செய்யவள்-இலக்குமி. கடிநகர் - காவல் உள்ள நகரம். ஒல்லை - சீக்கிரம்)

இத்தகைய அழைப்பைப் பெற்ற இராம லக்குமண ரும் முனிவரும், சீதையாகிய லக்ஷிமி இருத்தலாலே பெருமை பெற்ற மிதிலை நகரத்துள்பிரவேசித்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/45&oldid=651201" இலிருந்து மீள்விக்கப்பட்டது