பக்கம்:சீதா கல்யாணம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 45

வாள் அரம் பொருத வேலும்,

மன்மதன் சிலையும், வண்டின் கேளொடு கிடந்த நீலச் -

சுருளும், செம்கிடையும் கொண்டு, நீள் இரும் களங்கம் நீக்கி,

நிரை மணி மாட நெற்றிச் சாளரம் தோறும் தோன்றும்

சந்திர உதயம் கண்டார்.

(வாள் அரம் பொருத வேல் - ஒளியையுடைய அரத்தினால் அராவப்பட்ட வேலாயுதம். செம்கிடை - சிவந்த கிடைச்சு நெற்றிச்சாளரம் - முன்பக்கத்திலுள்ள பலகணி) -

இப்படி மிதிலா நகரத்துத் தெருக்கள் வழியாகச் சென்று கொண்டிருந்த முனிவரும் குமரரும், கன்னிமாடத்து மேடை மீதிருந்து அன்னங்கள் தடாகத்தில் விளையாடும் காட்சியைக் கண்டு களித்துக் கொண்டிருந்த சீதையைக் காண்கிறார்கள்.

பொன்னின் சோதி, போதினின் நாற்றம் பொலிவே போல், தென் உண் தேனின் தீம் சுவை, செஞ்சொல் கவி இன்பம், கன்னி(ம்) மாடத்து உம்பரின் மாடே, கழிபேடோடு அன்னம் ஆடும் முன்துறை கண்டு அங்கு அயல் நின்றார். சீதை, களிக்கின்ற கண்களோடு, கல்லும் புல்லும் கண்டு உருகும்படி, பெண்ணின் நலமெல்லாம் கனிந்த கனியாக நிற்கின்றாள். -

கொல்லும் வேலும், கூற்றமும் என்னும் இவை யெல்லாம் வெல்லும், வெல்லும், என்னமதர்க்கும் விழிகொண்டாள், !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/47&oldid=651206" இலிருந்து மீள்விக்கப்பட்டது