பக்கம்:சீதா கல்யாணம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 47

வரிசிலை அண்ணலும் வாள் கண் நங்கையும், இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்.

பாற்கடலில் ஒன்றாயிருந்த திருமாலும் இலக்குமி யும், சிறிது காலம் உலக சம்ரக்ஷனார்த்தம் பிரிந்திருந்து, இன்று மறுபடியும் கூடிவிட்டார்கள், என்று சொல் லும்படியாகத்தான் சீதா ராமர் சந்திப்பு இருந்தது.

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும், ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்றாயினர். கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ? இப்படி இராமனும் சீதையும் சந்தித்த பின்னர், இராமன் விசுவாமித்திர முனிவருடன் சென்று சீதையின் பார்வையிலிருந்து மறைந்து விட்டான். இராமனைப் பார்த்த சீதை அப்படியே அவசரமுற்று விடுகிறாள். சீதையின் மனமாகிய மதயானையும் நிறையென்றதோட்டிக்கு அடங்காது நிமிர்ந்து போய் விடுகிறது.

பிறை எனும் நுதலவள் பெண்மை எனப்படும்? நறை கமழ் அலங்கலான் நயனகோசரம் மறைதலும், மனம் எனும் மத்த யானையின் நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே! (பெண்மை - பெண்களுக்குரிய அடக்கம். நறை - வாசனை நயன கோசரம் - கண்ணுக்குத் தெரிதல், நிறை-கற்பு) -

இராமனைப் பிரிந்த சீதை தனித்துப் புலம்புகிறாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/49&oldid=651210" இலிருந்து மீள்விக்கப்பட்டது