பக்கம்:சீதா கல்யாணம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

இது கம்பன் கழகத்தின் வெளியீடு.பேராசிரியர் திரு. ரா.பி. சேதுப்பிள்ளையவர்களின் ஆலோசனையின் பேரில் திரு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்களை, இந்த நூலை எழுதியுதவும்படி வேண்டிக்கொண்டோம்.அவர்கள் உடனே இசைந்து தமது அரசாங்க உத்தியோக வேலைகளுக்கிடையே, சிரமம் பாராட்டாது இதனை முடித்துக் கொடுத்தார்கள். அன்னாருக்கு எமது வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 இந்த நூலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனுடைய நூறு பாடல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சொற்களின் சந்தி பிரிக்கப்பட்டிருப்பதால், இளைஞர் யாவரும் கவிகளின் பொருளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடும்.ஒவ்வொறு குடும்பத்திலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட விசேடங்கள் நடைபெறும் போது, இத்தகைய நூல்களை அச்சிட்டோ, வாங்கியோ,சிறுவர் சிறுமியருக்குப் பரிசளிப்பது மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று அன்பர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
 கம்பன் புகழ் வாழ்க!கன்னித் தமிழ் வாழ்க!


                       சா.கணேசன்

செயலாளர் கம்பன் கழகம், காரைக்குடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/5&oldid=1365792" இலிருந்து மீள்விக்கப்பட்டது