பக்கம்:சீதா கல்யாணம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. இராமன் வில்லொடித்தது

ராமன் பெருமையை முனிவர் எடுத்துக் கூறிய்தைக் கேட்ட சனகன், ஐயோ! இவ்வளவு அழகு வாய்ந்த வீரனுக்கு, ஜானகியை மணம் முடித்துக் கொடுத்து விடலாமே! இப்படி விரைவிலே மணம் முடிப்பதற்கு இடையூறாக அல்லவா இந்த வில் ஒன்று இருக்கிறது. இந்த வில்லை வளைப்பவனுக்கே இவள் உரியவள் என்ற பணயம் மட்டும் குறிப்பிடாதிருந்தோ மில்லையே! என்று சிந்தித்து மனம் உளைகிறான். இவ்வாறு தழைக்கின்ற உள்ளத்தோடு, இராமனைப் பார்க்கிறான் ஒரு தடவை, வில்லைப் பார்க்கிறான் ஒரு தடவை, தன் மகள் சீதையை நினைக்கிறான் ஒரு தடவை. அவன் உள்ளத்தில் எழுகின்ற சிந்தனைகளை யெல்லாம் ஊகித்துணர்கிறான் சதாநந்தன். அவன், வில்லினது பெருமையையும், அது சனகனிடம் வந்த வரலாற்றையும், வில்லை வளைப்பவனுக்கே சீதையை மணம் முடித்துக் கொடுப்பதாகச் சனகன் ஏற்படுத்தி யுள்ள நியமத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறான்.

போதகம் அனையவன் பொலிவு, நோக்கி, அவ் வேதனை தருகின்ற வில்லை நோக்கி, தன் மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய கோதமன் காதலன், கூறல் மேயினான்.

(போதகம் - யானைக் கன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/60&oldid=651237" இலிருந்து மீள்விக்கப்பட்டது