பக்கம்:சீதா கல்யாணம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 65

அது முடியக்கூடிய காரியமா? என்று அங்கலாய்க் கிறாள். பின்னர்,தோழிநீலமாலை சொல்லுகின்ற குறி களால்கோமுனியுடன் வரும் கொண்டல்” என்றபின், “தாமரைக் கண்ணினான்’ என்ற தன்மையால், ஆம்! அவனே என் உள்ளங் கவர்ந்த கள்வன்’ என்று ஒருவாறு ஐயம் நீங்குகிறாள். ஒருவேளை அவன் அல்லாது வேறு ஆளாக இருப்பின், இறந்து தீர்வதே தன் கடன் என்றுகூடத் தீர்மானித்து விடுகிறாள். சீதையின் நிலைமை இவ்வாறிருக்க, சனகன் இராமன் வில்லொடித்த தினால் மிகுந்த சந்தோஷமுற்று, விசுவாமித்திரரைக் கலந்து, நிகழ்ந்தவை அனைத்தை யும் தசரதனுக்குத் தெரிவித்துவரத் தூதரை அனுப்பி, அவரிடம் மண ஒலையையும் கொடுத்தனுப்பினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/67&oldid=651254" இலிருந்து மீள்விக்கப்பட்டது