பக்கம்:சீதா கல்யாணம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - சீதா கல்யாணம்

கொண்டு எதிர் வீசுவாரும்; - கோதை கொண்டு ஒச்சுவாரும்; தொண்டை வாய்ப் பெய்து, துநீர்

கொழுநர் மேல் துகின்றாரும்; புண்டரீகக் கை கூப்பி,

புனல் முகத்து இறைக்கின்றாரும். நானம் - கஸ்தூரி. கோதை - பூச்செண்டு. துரகின்றார் - தூவுகின்றவர். புனல் - நீர்) - *

இப்படி யெல்லாம் நீர் விளையாட்டு நிகழ்கின்றது. இவ்வாறு ஆடவரும் பெண்டிரும் நீராடியதைக் கண்டு, தானும் நீராட விரும்பினவன் போல், சூரியனும் மேல் திசைக் கடலிலே விழுந்து அஸ்தமித்தான். வான வீதியிலே சந்திரனும் தோன்றித் தன் கிரணங்களை, ஆறு, கடல், மலை முதலிய எல்லா இடத்தும் வீசி, இயற்கையின் எல்லாப் பொருள்களையும் வெண்ணிற மாக்கிவிட்டான்.

ஆறு எலாம் கங்கையே ஆய, ஆழிதாம் கூறு பால் கடலையே ஒத்த; குன்று எலாம் ஈறு இலான் கயிலையை இயைந்த; என் இனி வேறு யாம் புகல்வது நிலவின் வீக்கமே! இயைந்த-ஒத்தன. வீக்கம் - மிகுதி) இரவும் சந்திரிகையும் சேர்ந்தால் காதலர்கள் கூடிக் களிப்பதற்குக் கேட்டானேன்! இப்படி யெல்லாம் களியாட்ட மாடிக்கொண்டு போன சேனையும்

மாதரும், தசரதனும் மற்றவரும், மிதிலைக்கு வந்து சேர்ந்தார்கள். மிதிலை மன்னனான சனகனும் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/72&oldid=651266" இலிருந்து மீள்விக்கப்பட்டது