பக்கம்:சீதா கல்யாணம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 73

விரிந்து வீழ் கூந்தல் பாரார்,

மேகலை அற்ற நோக்கார், சரிந்த பூம் துகில்கள் தாங்கார்,

இடை தடுமாறத் தாழார், நெருங்கினர்; நெருங்கிப் புக்கு,

'நீங்குமின்! நீங்குமின் என்று, அரும் கலம் அனைய மாதர்,

தேன் நுகர் அளியின் மொய்த்தார். (அரும் கலம் அணைய-அரிய ஆபரணங்களைப் போல் அழகு செய்யும். அளி- வண்டு) -

மாதர்க்ள், தம்மை இராமன்பால் இழுத்துக் கொண்டு தமக்கு முன்னாக ஒடும் மனத்தை எட்டிப் பிடிக்க விரும்புபவர் போல, விரைவாக ஒடி வருகின் றார்கள். - பள்ளத்துப் பாயும் நல்நீர் - அனையவர், பானல் பூத்த

வெள்ளத்தும் பெரிய கண்ணார்,

மென் சிலம்பு அலம்ப, மென் பூ தள்ள, தம் இடைகள் நோவ, -

தமை வலித்து அவன்பால் செல்லும் உள்ளத்தைப் பிடித்தும் என்ன

ஓடுகின்றாரும் ஒத்தார். - (பானல் - கருங்குவளை. வெள்ளம் - கடல். பூ - பூ போன்ற பாதம். வலித்து - இழுத்து)

இராமனது அவயவங்களில் ஒன்றைப் பார்த்தவர் கள் அந்த அவயவத்தின் அழகிலேயே மயங்கி நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/75&oldid=651272" இலிருந்து மீள்விக்கப்பட்டது