பக்கம்:சீதா கல்யாணம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சீதா கல்யாணம்

விடுகிறார்கள். அவர்கள் தாங்கள் பார்த்த அந்த அவயவத்திலிருந்து மற்ற அவயவங்களின் அழகை யெல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காதவர்கள் ஆகின்றார்கள். - -

தோள் கண்டார் தோளே கண்டார்!

தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே காண்டார்!

தடக்கை கண்டாரும் அ.தே! வாள் கொண்ட கண்ணார் யாரே

வடிவினை முடியக் கண்டார்? ஊழ் கொண்ட சமயத்து அன்னான். உருவு கண்டாரை ஒத்தார். (தொடு கழல்-காலில் கட்டிய வீரக் கண்டை. கொண்ட - நிகர்த்த ஊழ்-முடிவு) -

இப்படியே மாதர்களது உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொண்ட வீர புருஷனான இராமனும், அரசர் குழாம் புடை சூழத் தம்பியரோடும் சென்று, வசிட்டர் விசுவாமித்திரர் இருந்த மண்டபத்தைச் சேர்ந்தான். அங்கே தசரதன், சனகன் முதலியோரும் வந்து சேர்ந்தார்கள். சனகன், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் பாராட்டாமல், எல்லோருக்கும் உயர்ந்த சன்மானம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/76&oldid=651275" இலிருந்து மீள்விக்கப்பட்டது