பக்கம்:சீதா கல்யாணம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. சீதைக்கு அலங்காரம் செய்தல்

தசரதன் தன் தேவியரோடு சிங்காதனத்தில் இருந்தபோது, வசிட்டர் சனகனை நோக்கிச் சீதையை அழைத்து வரும்படி சொன்னார். சனகனும் தன் அருகிலிருந்த மாதரை அனுப்பி, சீதையை அழைத்து வரச் சொன்னான். இம்மாதர் சென்று சேடியரிடம் சொல்ல, அவர்கள் சீதையை அலங்கரிக்க ஆரம்பித்தார் கள்.இவர்கள் அணிவித்த அணியும் பணியும் சீதையின் உருவை மறைத்தனவே ஒழிய அவள் அழகை அதிகப் படுத்தவில்லை. அழகினுக்கு யாரே அழகு செய்ய முடியும்? -

அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு

அணி என அமைக்குமா போல், உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை

உருவினை மறைப்பது ஓரார், அமிழ்தினைச் சுவை செய்து அன்ன,

அழகினுக்கு அழகு செய்தார். இமிழ் திரைப் பரவை ஞாலம்

ஏழைமை உடைத்து, மாதோ! அமிழ் இமை - தாழ்கின்ற கண் மடல். துணை - இரண்டு. இமிழ் திரை - ஒலிக்கின்ற அலை. பரவை.கடல்) - *

இப்படிச் சீதைக்கு அணிகளை யெல்லாம் பூட்டிய பின், திருஷ்டி தோஷம் கழித்து, இரட்சாபந்தனம் செய்தார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/77&oldid=651277" இலிருந்து மீள்விக்கப்பட்டது