பக்கம்:சீதா கல்யாணம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 77

கைவளையல்களைத் திருத்தும் பாவனையாக, தன்

வளையல்களைப் பார்க்கிறவள் போலக் கடைக்

கண்ணால் இராமனையும் பார்த்துக் கொண்டாள்.

எய்ய வில் வளைத்ததும், இறுத்தலும் உரைத்து மெய் விளைவு இடத்து, முதல் ஐயம் விடல் உற்றாள் ஐயனை, அகத்து வடிவே அல, புறத்தும், கைவளை திருத்துபு கடைக்கணின் உண்ர்ந்தாள்.

(மெய் விளைவு இடத்து - இராமனது உருவம் சம்பந்தப்பட்ட அளவில். திருத்துபு - திருத்துகிற மாதிரி)

தான் முன்னர் கன்னிமாடத்துக் கண்டு காதலித்த தலைவனே இன்று தன்னை மணக்க இருக்கும் மணா ளன் என்றறிந்து, பல கோடித் தேவர்கள் பங்கிட்டு உண்ட அமுதம் அத்தனையும், வேறு ஒருவருக்கும் பங்கிட்டுக் கொடுக்காமல் தான் ஒருத்தியாகவே உண்டு களித்தவள்போல, உடம்பு பூரித்துப் போய் விடுகிறாள் சீதை.

கரும்கடை நெடும் கண் ஒளி யாறு, நிறைகண் அப் பெரும் கடலின் மண்ட, உயிர் பெற்று இனிது உயிர்க்கும் அரும் கலன் அணங்கு அரசி, ஆர் அமிழ்து அனைத்தும் ஒருங்கு உடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள். (ஒளியாறு-கண்ணாகிய ஆறு. நிறை கண்-நிரம்பிய கண்ணன்) -

தசரதன் விசுவாமித்திரரை மணநாள் ஒன்று குறிக் கும்படி வேண்ட, அவரும், நாளைத்தினமே நல்ல தினம்’ என்று நாள் குறித்துக் கொடுக்கிறார். மறுநாள் நடத்தப்போகும் மணவினையில் எல்லோரும் பங் கெடுத்துக் கொள்ள விரைகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/79&oldid=651282" இலிருந்து மீள்விக்கப்பட்டது