பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


உண்மை நிலையை உணர்ந்தவன் மாதிரி சிரித்தான். 'உடம்புக்கு என்ன கேடு?...என்னுடைய மனசின் கஷ்ட நஷ்டங்களை சிறுபொழுதேனும் மறந்திருக்கத்தான் மருந்து சாப்பிட்டேன்!” என்ருன் குமார். தண்ணிர்ச் செம்பை எட்டத்தில் நகர்த்திவிட்டான்.

சுமதி என்ன பதில் மொழிவான்? குமாரின் இப்போதைய மனத்தின் கஷ்ட நஷ்டங்களுக்கெல்லாம் மூலகாரணமே அவள்தானே? அவளுடைய பெண் உள்ளம் பாகாய் இளகி உருகியது. நெஞ்சம் நெகிழ, நயனங்கள் நெகிழ்ந்தன. "அமைதியாக இருங்க’, என்று கெஞ்சிள்ை அவள்.

‘அமைதியா? எனக்கா? தேம்பினுன் குமார்.

குமாரை எவ்வாறு சமாதானப்படுத்துவதென்றே புரியவில்லை; தவித்தாள் சுமதி. குமாருக்குப் புதியதொரு தாம்பத்தியப்பந்தம் ஏற்பட்டுவிட்டால், மனம் மறுமலர்ச்சி பெருதா?-கட்டாயம் மறுமலர்ச்சி பெறும்! ஆனால், எப்படி இந்த வழியை எடுத்தியம்ப இயலும்? என்னவோ எடுத்துரைக்க விரும்பினுள் அவள். அவள் வாயைத் திறந்த நேரத்தில், சிசுவும் வாயைத் திறந்துவிடவே ஓட்டமாக ஒடினுள். ஃபாரெக்ஸ் கொடுக்கணும் பாப்பாவுக்கு!’

குமார் மலைத்தான்; சிலையாக மலைத்தான். குழந்தையின் பேரில்தான் சுமதிக்கு எவ்வளவு அக்கறை? தெய்வமாகவே வழிபட்டு வந்த அக்கா:பெற்ற செல்வன் ஆயிற்றே?-ஏன் அக்கறை இருக்கமாட்டாது? உலக வாழ்வில் எட்டாப்பழம் இனிப்பது கிடையாது. ஆனால் அவன் நேரெதிர்!-சுமதி, இந்த ஜன்மத்தில் உன்னே என்னலே மறக்கவே முடியாது!’ கண்கள் வீங்கி வலித்தன; நெஞ்சும் கூடத்தான். திரும்பி வருவாளா சுமதி? வந்தால்தான் நான் பிழைப்பேன்!இருதயப் பகுதியைத் தடவிக் கொடுத்தான். உள்ளேயிருந்து 'ட்ரான்ஸிஸ்டரி'ல் பாட்டுக் கேட்டது. பாரதி பாடல். ஆஹா! நின்றன் காதலை எண்ணிக் களிக்கிறேன்... அவன்