பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


அழகான நாதவீணை நறுவிசாகக் கிடக்குமே, அந்த உதாரணத்திற்கு உத்தாரம் கொடுக்கிற மாதிரி, அலுங் காமல் குலுங்காமல், ஜீவ வினையெனக் கிடக்கின்ருள் சுமதி.

சுமதி: சுமதி!'

4 : 3 * * * * * * * * * *

உள்ளம் தொட்டவளின் உடலைத் தொட்டு எழுப்பக் கருதி உரிமையின் உறவுடன் கைகளை விரித்தான் அவன்; கைகள் நடுங்கின; பின் வாங்கின. ஜாதிமல்லிகைப் பூவுக் கென்று இதயத்தைக் கிறங்க வைக்கின்ற அப்படியொரு நெடியா? தங்கக் கழுத்தின் தங்கச் சங்கிலியின் வெண் பதக்கம் எவ்வளவு கவர்ச்சியுடன் மையம் கணித்துப் பதிந்து கிடக்கிறது! தொடுத்த கண் எடுக்காமல் சுமதியையே வெறித்துப் பார்த்தான் சுந்தர். மோகக் கிறக்கத்தின் நாடகம் முதற் காட்சியோடு சரி: துரங்கிய சுமதியின் துரங்காத எழிலைக் காணக் காண-ரசிக்க ரசிக்க, அவனுக்கு வியப்பு மிகுந்தது. இவ்வளவு நெருக்கமாக-இவ்வளவு தத்ரூபமாக அவளை அவன் பார்த்ததே கிடையாதே! அழகுக்கு அழகாக அமைந்திட்ட விைேதத்தை உணர, உணர, அவளேக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் இருந்தது. கைகள் நடுங்கின. 'என் சுமதி தேவலோகத்துப் பாரிஜாதப் பூவா? கேவலம், அற்பமான எனக்கு இப்படி யொரு அதீதமான பாக்கியம் காத்திருக்கிறதே! ஆஹா! நான் கொடுத்து வைத்தவன்; சுமதியை எடுத்துக் கொள்ளப் போகிறேன்! ஒரு கன்னிப்பூ எனக்கு மாலை ஆகப் போகிறது!’ தன்னுணர்வு விழிப்புப் பெற்றது.

டக்-டிக்-டக்!

சுமதி சுமதி!'

மைத்துணி சுமதி இன்னமும்கூட துயில் கலையக் காணுேம்!

சுந்தரின் மனம் நெகிழ்ந்தது; கண்கள் கசிந்தன; பாவம், சுமதி!...ராத்திரி-பகல் எந்நேரம் பார்த்தாலும் ராஜா