பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#0

ஆசைக்கும், கனவுக்கும், தவத்துக்கும், வேண்டுதலைக்கும் ஒரு உயிர் வடிவத்தைப் பெற்றுத் தந்திட்ட உன்னையே உயிரும் உயிர்ப்புமாகி நினைச்சேன்; நினேச்சு நினைச்சு, ஆனந் தக் கண்ணிரும் விட்டேன்! இது சத்தியம், சுசீ, இது சத்தியம்!’’

"நான் பாக்கியவதி, அத்தான்!”

'நானும் பாக்கியவான், சுசீ!”

அவளுடைய மகிழ்வின் கண்ணிரை அவன் துடைத் தான்; மேனி புல்லரித்தது. தாலிச்சரட்டில் மங்கலம் பொலிந்தது; கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

அவனுடைய ஆனந்தத்தின் துளிகளே அவள் ஒற்றி யெடுத்தாள்; பச்சை உடம்பு குலுங்கியது.

'நாம முன்னே குடியிருந்த மண்ணடி வீட்டுக்காரி உன்னைப்பற்றிச் சதா விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க, அந்தப் புண்யவதி கொடுத்த நல்ல வாக்குப் பிரகாரம் நீ நல்ல படியாய்ப் பெற்று பிழைச்சிட்டே!...உன்னை டிஸ்சார்ஜ் செய்து ஊரிலே அழைத்துப்போய் விட்டுட்டு, ஒரு மூணு மாசம் கழிஞ்சதும், திரும்பவும் உன்னையும் பாப்பாவையும் பட்டணத்துக்கு அழைச்சுட்டுப்போய் நாம் முன்னே மண்ணடியிலே குடியிருந்த அதே வீட்டிலேதான் குடி வைக் கப் போறேளுக்கும்! ஆகிவந்த, கைராசியான வீடாக்கும் அது!’ என்று பெருமையும் பெருமிதமும் கூடியாடத் தெரிவித்தான் சுந்தர்.

'ஒஹோ! அப்படிங்களா ?” என்று ᏧFóóᎢé குரலெடுத்துக் கேட்டுவிட்டு, டக்கென்று மெளனம் காத்தாள் சுசீலா. பின்னர், என்னவோ ஒர் அமைதியைக் காத்துக்கொள்ள நினைத்தாள்; மூணு மாசம் நல்ல பொழு தாக விடிஞ்சு கழிஞ்சிட்டா, உங்களோடு வராமல் நான் எங்கே ஊர்ப்பயணம் போகப்போறேன்?... நம்ப ராஜாவை வளர்க்க மெட்ராஸ்தான் வசதியாக இருக்கும். சரிதானே, அத்தான்?’ என்று வினவினுள் திருமதி சுந்தர்