பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120


சுமதி அந்தப் பொட்டணத்தை அருவருப்புடன் ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, "மிஸ்டர் குமார், இந்த மாதிரியான மருந்தின் பேரிலே இருக்கிற நம்பிக்கை உங்க ளோடேயே இருக்கட்டும்; என்னைவேறு கெடுத்து வச்சிடா தீங்க!' என்று எரிச்சலுடன் வேண்டிக்கொண்டு குமாரி வசம் அதைத் திரும்பவும் ஒப்படைத்தாள்.

சுமதி!' என்ருன் குமார், அதிர்ச்சியோடு.

“புறப்படுவதானல், புறப்படுங்க, குமார் கல்யாணத் துக்குக் கட்டாயம் வந்திடனும், மிஸ்டர் குமார்!’

'ஆகட்டுங்க, சுமதி!' சுமதி டாடா சொன்னுள்.

இருட்டில் பழக்கப்பட்டவன் போன்று, இருட்டோடு இருட்டாக மறைந்து விட்டான் குமார்!...

வெளிச்சத்தில் பழக்கப்பட்டவன் மாதிரி, வெளிச் சத்தோடு வெளிச்சமாகச் சிரித்துக்கொண்டிருந்தான் ராஜா

குழந்தையின் பாலமுதச்சிரிப்பில் சுமதி மெய்ம்மறந் தாள்; பால்வழியும் முகத்தில் பூச்சொரியலாகப் பூத்திருந்த 'குடிகுரா பவுடரின் நறுமணம் அவள் நாசியில் இன்னமும் மணம் பரப்பிக்கொண்டிருந்தது. கதுப்புக் கன்னங்களில் அழகு காட்டிய-அழகு கூட்டிய திருஷ்டிப்பொட்டு’, சிரிக் கையில் ஏற்பட்ட கன்னக்குழிவுகளிலே பளிச்சிட்டது. *ராஜா கன்னங்குழியச் சிரிக்கிறதைப் பார்க்க ಆ# fr இல்லாமல் போயிட்டாளே?’ என்று நினைத்துக்கொண்டதும், அவளுக்கு மூச்சு நின்றுவிடும் போலிருந்தது.

கண்கள் பொலபொல'வென்று கண்ணிரை வடித்தன. நீர்ப்படலத்தில் சுசீயின் அன்பு உருவம் அழகழகான கோணங்களில் நிழலாடத் தொடங்கிவிட்டது. சுசி, இனி எப்பிறப்பிலே நான் உன்னைக் காணப்போறேன்? என் கிட்டே நீ வாய்மூடி மெளனியாகி ஒருவரம் வாங்கிக்கிட்டே,