பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


திட்டுவா; தூங்கினல் எழுப்பு: தூங்காட்டி, சாப்பிடக் கூப்பிடு,’ என்று உபதேசம் படித்தாள் அம்மா

எதையோ பறிகொடுத்துவிட்டு விழிப்பவள்போல விழித்த சுமதி, அம்மா, அத்தானை இன்னமும்கூட என்னுலே சரிவரப் புரிஞ்சுக்க முடியல்லே, ஒருசமயம் நல்லபடியாய்ப் பேசுருங்க; மறுசமயம் எதையோ திருடிட்டது கணக்கிலே முழிக்கிருங்க; இன்ைெருவாட்டி, என்னத்தையோ இழந் திட்டமாதிரி உருகிருங்க!' என்று சன்னக்குரலில் பின்னிப் பின்னிப் பேசிளுள்.

தெய்வநாயகி ஆற்ருமையுடன் லேசாகச் சிரிக்க முயற்சி செய்தாள். 'சுமதி, உன் அத்தானைப் பற்றிக் கொஞ்சமுந்தி நீ வியாக்யானம் படிச்சதை நினைச்சுப்பார்த்தால், உண்மை விளங்கும்; திருடிக்கிட்டது உன்னே...இழந்தது உன் அக்காளே!’ என்று எடுத்தியம்பினுள்.

பெற்றவளின் உற்ற பேச்சை அவளது கன்னிமனம் சிலாகித்தது. ஆனலும், அத்தான் இந்தத் தோரணையிலே ஏடாகூடமாய் ஒண்ணுகிடக்க ஒண்ணே பேசப்படாதுதான், அம்மா!' என்று வருந்தினள் சுமதி. காப்பி ஆறிவிடப் பொகிறதென்று மாலையில் சொன்னதற்கு, என்னென் னவோ கூறவில்லையா சுந்தர்?

சரி, சரி, போய்ச் சாப்பாடு போடு; உன் கழுத்திலே மூணுமுடிச்சுப் போட்டுப்பிட்டா, அப்புறம் உன் அத்தான் உன்கிட்டே தன்ளுேட உடல், பொருள், ஆவி அத்தனை யையும் முணுமுடிச்சுப் போட்டு ஒப்படைச்சுப்பிட மாட்டாங்களா?...ம், கிளம்பு. சுமதி' என்று துரண்டி விட்டாள் அம்மா.

அறையை மிதித்தாளோ, இல்லையோ, தியை மிதித்தவ ளாகத் தடுமாறினுள் சுமதி.

சுந்தர் விம்மியவாறு தனக்குத்தானே பேசிக்கொண்டி ருந்தான் : சுசீ, அப்பவே நான் ஒரு பேச்சுக்குச்