பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


"பின்னே?"

யார் இப்படி நிர்த்தாட்சண்யமாகச் சிரிக்கிரறார்களாம்? - சிரித்தது யாராம்?...

மெளனம் திரைவிரிக்கிறது!...

ஏதோ ஒரு சிந்தனை வசப்பட்டவன் மாதிரி, சுந்தர் எழுந்தான்; பிறகு, உட்காரலானான்; பத்தரை மணியோடு தான் பார்வையாளர் நேரம் முடியும்!- "சுசீ, எனக்கு ஒரு ஆசை இருந்திச்சு: உன்னை உரிச்சு வச்சாப்பிலே ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால், என்னோட மனசுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்குமோன்னு இப்போது தோணுது என்று தெரிவித்தான், ஏக்கத்தோடு.

அந்த ஏக்கம் சுசீயின் பெண் உள்ளத்தைத் தொட்டிருக்குமோ? தொண்டையைக் கனைத்தபடி, "அப்படிங்களா, அத்தான்? அடுத்த தடவை உங்க இஷ்டப்படி உங்க கையிலே ஒரு பெண்ணையும் பெற்றுத் தந்திடறேனுங்க!" என்று சொன்னாள்; பெருமூச்சு வெளியேறியது; அந்தப் பெரு மூச்சிலே, சுந்தர் - சுசீ தம்பதி, குழந்தைக்காக ஆறேழு வருஷங்கள் தவம் இருந்த தாபமும் தாகமும் நினைவோடி, நிழலாடியிருக்கும் போலும்!

சுசீயின் நிம்மதி நிறைந்த மலர்ச் சிரிப்பு அவன் வாயைக் கட்டிவிட்டது. "ஆல் ரைட்!"

துவைத்த துணிமணிகளுடன் அம்மா கீழ வாசற்படியில் ஒளிந்து, நின்ற துப்பு, இப்பொழுதுதான் சுசீலாவுக்குப் புரிந்தது. அத்தான் எழுந்தால்தான் அம்மா உள்ளே வருவாள்! - பாவம் - அம்மா! வின்சென்ட் ரோஸ்ட் எந்நேரமாகக் காத்திருக்கிறது! பேபி இனி விழித்துக் கொள்ளும் இம்மாதிரிச் சமயங்களிலே சுமதி இருந்தால், எவ்வளவோ உபகாரமாக இருக்கும்!

கோடியில் குழந்தை ஒன்று ‘குய்யோ முறையோ’ என்று கதறியது. தொண்டு கிழம் பதறியடித்துக்கொண்டு அந்தப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள்.