பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினறு

ஒரு திட்டம் உருவாகிறது

இன்பக் களி துலங்க, ஆர்வத்துடிப்புடன் வரவேற்புக் கூறிள்ை சுமதி. கோலமதர் விழிகள் குது.ாகலத்தோடு துடித்தன; செம்பவள இதழ்களில் சிந்துாரச் சிரிப்புத் தவழ்ந்தது. நித்திய மல்லிகைப் பூவின் நீங்காத புனிதமும், பிறை நெற்றியில் பொலிந்த திருநீற்றுக் கீற்றும் அழகுக்கு அழகு செய்தன; அழகுக்கு அழகாகவும் அமைந்தன. இருவரையும் உள்ளே அழைத்துப் போளுள் அவள்.

முகப்பு வெளிக் கூடத்தில் குமாரும் சுஜாதாவும் அருகருகில் அமர்ந்தனர்.

பூங்காற்று சுகமாகவே வீசுகிறது. மெளனம் மோனத்தவம் இயற்றியது.

திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர் இருவரையும் இன்னமும் அறிமுகம் செய்து வைக்கவில்லையென்னும் உண்மையை உணர்ந்ததும், சுமதிக்குத் தவிப்பு மேலிட்டது: சிலிர்த்திட்ட பரபரப்புடன், மிஸ்டர் குமார், இவள்தான் சுஜாதா; என் தோழி; உங்கள் சிநேகிதியும் கூட’, என்று சுஜாதாவைக் குமாருக்குப் பழக்கப்படுத்தி வைத்தாள் சுமதி. பிறகு சுஜாதாவை நோக்கி, இவர் குமார். உன் தோழர்;