பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144


என்று சுஜாதா நினைவூட்டியதும் பேசத் தொடங்கிளுள் சுமதி: 'சுஜா, என்னுடைய ப்ளானுக்கு நீ பச்சைக் கொடி காட்டிய வரையிலே எனக்குக் கரைகடந்த சந்தோஷம்தான். ஆனல், உன்னுடைய நல்ல வாக்கும் என்னுடைய நல்லெண் னமும் பலிதமடைவது தற்சமயம் குமார் சொல்லக் கூடிய தீர்ப்பிலே தான் இருக்கு. இப்போதைய நிலையிலே. குமாரை என்னலே புரிஞ்சுக்கிடவே முடியல்லே!...அப்படிப்பட்ட தொரு இக்கட்டுக்கு, நாங்க ரெண்டு பேரும் இரு துருவங் களாகப் பிரிய நேர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆணுலும், குமார் பேரிலே நான் அன்று வச்சிருந்த நன்னம் பிக்கை இன்றுவரை குறையவே இல்லை. குமார் வெறும் பச்சிலை, சாமியார் என்கிற வகையிலே குறுக்கு வழியிலே போய்க்கிட்டு இருக்கிற தடத்தை மாற்றி நேர்வழியிலே அவரை நடக்க வச்சுப்பிட வேணும் என்பதுதான் என்னு டைய மனப்பூர்வமான ஆசை, கவலையெல்லாம். ஆண்டவன் தான் எனக்குத் துனே இருக்க வேணும். விதியோட ப்ளான்” எப்படியோ?...'

காது வளையங்களை நெருடிவிட்டவாறு, ஒய்யாரமாக நின்ற சுஜாதாவிடம் பேசிவிட்டு, குமாரை நாடிப் போய்க் கொண்டிருந்தாள் சுமதி. சுந்தர் வேறு ஞாபகப்படுத்தி வைத்தான். அவளுக்குத் தெம்பு அதிகமாயிற்று. “குமார், உங்க கையிலே கொஞ்ச நேரம் தனியாகப் பேசனும், தயவு செஞ்சு வருவீங்களா?' என்று கேட்டதும், அவன் தட்டா மல் இணங்கியது அவளுக்கு ஆறுதலாகவே இருந்தது.

இரண்டாம் கட்டில் இப்போது ஒளி பரவியது. குமார், நீங்கே முதல் தடவை இங்கே வந்திட்டு ஊருக்குப் போனதற்கப்புறம் நான் உங்களுக்கு ஒரு தபால் போட்டேன். அது உங்களுக்குக் கிடைச்சிருக்கும்; ஆனல், உங்ககிட்டேயிருந்து ரொம்ப ரொம்ப ஆவலாகப் பதிலை எதிர்பார்த்தேன். வரவேயில்லை!'

குமார் கைகளைப் பிசைந்து கொண்டு, இதழ்களை விலக் -கின்ை. சுமதி, நீ......மன்னிக்க வேணும்.....நீங்க போட்ட